ஞாயிறு, 8 நவம்பர், 2015

நிராயுதபாணியாக இருந்த எங்களுக்கு உதவிய ISF மற்றும் SDPI-ஐ நாங்கள் ஒரு போதும் மறக்க மாட்டோம்! - கஸ்தூரி அவர்களின் சகோதரி!


சவூதி அரேபியா, ரியாத்திற்கு வீட்டு பணிப்பெண் வேலைக்கு இந்தியாவிலிருந்து  சென்ற  வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கஸ்தூரி அம்மாள் முனிரத்தினம் கை துண்டிக்கப்பட்ட நிலையில் 'கிங்டம்' மருத்துவமனையில்  தொடர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அவர் சென்னை வந்திறங்கினார்.


அப்போது  அவரை  வரவேற்க  SDPI  கட்சியின் நிர்வாகிகள் விமானம் நிலையம் சென்றிருந்தனர். மேலும் கஸ்தூரி அம்மாளின் உறவினர்களும் சென்னை  விமான  நிலைய ம் வந்திறங்கினர்.

இதையடுத்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவரைக்காண யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. செய்தியாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. 

பின்னர் வெளியில் வந்த அவரை பேட்டி காணவோ, உறவினர்களை காணவோ அனுமதிக்காமல், ஆம்புலன்ஸில் ஏற்றி மிகுந்த கெடுபிடிகளை காவல்துறை மேற்கொண்டது.

இதையடுத்து அந்த ஆம்புலன்ஸ் முன்பாக செய்தியாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.  இதனால்  அங்கு  சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கஸ்தூரி அம்மாளின் சகோதரி விஜகுமாரி, எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளை சந்தித்து; “எனது சகோதரிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது என்பதை  நாங்கள் அறிந்த போது நாங்கள் மிகவும் கவலை அடைந்திருந்தோம்.

 நிராயுதபாணியாக இருந்த எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இந்நிலையில், எனது சகோதரிக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் வெளிநாட்டு பிரிவான இந்தியன் சோசியல் ஃபோரம் (ஐ.எஸ்.எஃப்) உதவி செய்து வருவதை அறிந்து நாங்கள் நிம்மதி அடைந்தோம்.

 அந்த பிரச்சனையில், நியாயம் கிடைக்க சட்ட ரீதியாக அனைத்து முயற்சிகளையும், அந்த அமைப்பைச் சேர்ந்த ரஷீத் அண்ணன் மேற்கொண்டார். 

நாங்கள்  எனது  சகோதரியுடன் தொடர்புகொள்ள வாய்ப்பை உருவாக்கி, நல்ல முறையில் அவருக்கு சிகிச்சை அளிக்க அவர் உதவினார். ஆரம்பம் முதல் அவர் சென்னை வரும் வரை அனைத்து உதவிகளையும் அவர் செய்தார்.

 நாங்கள் உயிரோடு இருக்கும் அவர்களின் உதவியையும், ஐ.எஸ்.எஃப் மற்றும் எஸ்.டி.பி.ஐ உதவியையும் மறக்க மாட்டோம்." என்று கூறி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அவரின் பேட்டியைக்காண...........

https://www.facebook.com/513672162125841/videos/vb.513672162125841/524373001055757/?type=2&theater

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...