சனி, 14 நவம்பர், 2015

இறந்தபின் தான் வேலை பார்த்த பள்ளிக்கே நன்கொடை கொடுத்த மோதினார் . படங்கள் இணைப்பு.

கீழக்கரை வடக்குதெரு ஜமாத்திற்கு சொந்தமான மஸ்ஜிதுல் மன்பயி பள்ளிவாசலில் கடந்த இருபத்தைந்து வருடங்களா முஅத்தின்னாக (மோதினாரக)  பணிபுரிந்து வரும் அப்துல் கரீம் அவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு   முன்பு   வபாத்தாகி விட்டர்கள்.


மறைந்த மர்ஹூம் ஹாஜி அப்துல் கரீம் அவர்கள் மரணிக்கும் தருவாயில் தன் உடல் நிலைமை சரியில்லாத நிலைமையில் தன் மனைவியிடம் தான் வேலை பார்த்த பள்ளிவாசலுக்கு தான் 25 வருடங்களாக சேமித்து வைத்த 21 பவுன் நகைகளை என்னுடைய மரணத்திற்கு பின் வடக்குதெரு ஜாமத்தில் ஒப்படைத்து விடுமாறு (வசியத்) கூறிவிட்டு சிறிது நாட்களில் இறந்து விட்டார்கள்.

இதனை அடுத்து அவருடைய மனைவி சிறிது நாட்கள் கழித்து அந்த நகைகளை  வடக்குதெரு ஜமாஅத்  தலைவர்  ஜனாப் அக்பர் கான்,  செயலாளர் ஜனாப், முகைதீன் இபுராஹீம், உறுப்பினர்கள் அஹமது நிசார். ஆகியோர்களிடம்  ஒப்படைத்தார்கள்.

அந்த நகைகளின்  மதிப்பு RS. 287,986 ஆகும்.

கொடைவள்ளல்களும்  செல்வந்தர்களும் வாழும் இந்த மண்ணில் சாதாரண மனிதனாக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து இறைவனின் இறை இல்லத்தில்  முஅத்தினாக  பணிபுரிந்து மறைந்த அப்துல் கரீம் அவர்கள் நாம்  வாழும் இக் காலத்தில் செத்தும் கொடைகொடுத்த வள்ளல்லாக அப்துல் கரீம் அவர்கள்  திகழ்கிறார்கள்.

மறைந்த அப்துல் கரீம் அவர்கள்  நம்முடைய அனைவருடைய நெஞ்சிலும் நீங்கா  இடம் பிடிப்பார்  என்பதில் ஐய்யமில்லை.

யா அல்லாஹ் இவரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை  அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல்  பிர்தௌஸ்’  எனும்  உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பாயாக.... 

 இவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவருக்கும்  ‘ஸப்ரன் ஜமீலா’  எனும்  அழகிய பொறுமையை  தந்தருள்வாயாக.. 

ஆமீன்....ஆமீன்....யாரப்பல் ஆலமீன்.


தகவல்... கீழக்கரை நகர் நல இயக்கம்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...