செவ்வாய், 10 நவம்பர், 2015

இஸ்லாமிய இளைஞர்களின் மனிதாபிமான சேவை.

மதங்களை கடந்த மனிதாபிமான நிகழ்வுகள் மனிதர்கள் தங்களின் வேற்றுமைகளை   மறந்து ஒற்றுமையாக  செயல்பட  உதவுகிறது.


 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த முருகன் என்பவருடைய‌ மகளான சிறுமிக்கு கண் குறைபாடு ஏற்பட்டு உள்ளது.  இது பற்றி அங்குள்ள‌ கீழப்பள்ளிவாசல்  இளைஞர்களிடம்  தெரிவிக்கப்பட்டது.

 இதையடுத்து அவர்கள் சிறுமியின் கண் சிகிச்சைக்கு நிதி திரட்டினர்.  திரட்டப்பட்ட நிதியை சிறுமியிடம் அளிக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

 இந்த நிகழ்ச்சியில் கீழப்பள்ளிவாசல் தலைவர் ஹாஜி எஸ்.என்.எம். முகம்மது யாக்கூப், எமனேஸ்வரம் காவல் நிலைய துணை ஆய்வாளர், ஆசிரியர் எம். புரோஸ்கான், ஆசிரியர் கே.ஏ. ஹிதாயத்துல்லா, அஸ்லம், ஜியாவுல்  ஆகியோர்  கலந்து  கொண்டனர். 

காவல்துறை  துணை ஆய்வாளர்  நிதியுதவியை  வழங்கினார். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...