ஆஸ்திரேலிய கடற்படையில் முதன் முதலாக ஹிஜாப் அணியும் கேப்டன் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய கடற்படையின் இஸ்லாமிய ஆலோசகராகவும், பொறியியலாளராகவும்
பணியாற்றும் எகிப்தைப் பூர்வீகமாகக் கொண்ட மோனா ஷின்டி என்பவரே இப்பெருமையைப் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதர்களிடமிருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் தனது மார்க்கம் தன்னை நெறிப்படுத்த உதவியதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆடை என்பது முன்னேற்றத்திற்கு தடையில்லை என்பது தான் இங்கு கவனிக்க படவேண்டியதாகும். அத்தோடு இது போன்ற முஸ்லிம் பெண்மணிகள் சாதிப்பது அரிது என்பதும் கசப்பான உண்மையாகும்.
ரூமி முஹம்மத் முஜாஸ். Roomy Mohamed Mujas





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக