சவூதி அரேபியா, ரியாத்திற்கு வீட்டு பணிப்பெண் வேலைக்கு இந்தியாவிலிருந்து வந்த தமிழ் பெண்மணி கஸ்தூரி அம்மாள் முனி ரத்தினம் கை துண்டிக்கப்பட்ட நிலையில் 'கிங்டம்' மருத்துவமனையில் தொடர் சிகிற்சை பெற்று வந்தார்.
அவரை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டது.
இதையடுத்து கஸ்தூரி விமானம் மூலம் இன்று சென்னை வந்தார். அரசு அதிகாரிகள் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர், கஸ்தூரிக்கு அரசு செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவரது மகன் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, அவர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
'இந்தியன் சோசியல் போரம்' என்ற இஸ்லாமிய அமைப்பின் தொடர் முயற்சிகளாலும், சவூதி அரசும், இந்தியா தூதரகமும் இணைந்து எடுத்த துரித நடவடிக்கைகளால் அது சம்பந்தமான வழக்கு நடைபெற்று வரும் நிலையில் கஸ்தூரியை இன்று சனிக்கிழமை சென்னைக்கு சவூதி ஏர்லைன்ஸ் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார்.
அவரை வரவேற்று அவரது வீட்டிற்கு கொண்டு சென்று சேர்க்கும் ஏற்பாடுகளை தாயகத்தில் உள்ள 'சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா செய்தது.

இந்த செய்தியை எந்த ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் தெரிவிக்கவில்லை.