வெள்ளி, 13 நவம்பர், 2015

இந்திய நாட்டிற்கு பெருமை தேடித் தந்த ஹர்ஜித் சிங். படங்கள் இணைப்பு.

இந்திய நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளார் கனடாவின் மத்திய பாதுகாப்பு  அமைச்சர் உயர் திரு ஹர்ஜித் சிங்.


சில  வாரங்களுக்கு முன் நடைபெற்ற கனடா தேசத்தின் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை அரசை  அமைக்கும் அளவிற்கு வெற்றி கண்டது லிபரல் அரசு.

 புதிய அரசு மந்திரி சபை அறிவிக்கப்பட்ட போது கனடிய மக்கள்  மிகவும்  மகிழ்ச்சியோடு  அதனை   வரவேற்றார்கள்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட நால்வர்  அமைச்சர்களாக  பதவியேற்றதே. அதிலும் பெரும் ஆச்சரியம் கனடாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சராக  உயர்  திரு ஹர்ஜித் சிங் அவர்களது   நியமனமே.

ஒரு  நேர்மையான  கனடிய  இராணுவ  வீரராகவும், பொலிஸ் அதிகாரியாகவும்  பணியாற்றி நற்பெயரை சம்பாதித்து கொண்ட ஹர்ஜித் சிங் அவர்களை  கனடாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சராக நியமனம் செய்த  செய்தி  கேட்டு அனைத்து கனடாவில் வாழ்கிற இந்திய மக்கள் சந்தோசத்தில் ஆழ்ந்தனர்.

கனடாவின் ஒரு சிறந்த அரசியல்வாதியாக திகழ்ந்து  இந்த நாட்டிற்கு பெருமை  சேர்க்க   கனடா வாழ்  இந்தியர்கள்  வாழ்த்துகிறார்கள்.

புகைப்படம் .கனடா உதயன்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...