சனி, 5 டிசம்பர், 2015

அரசு நிறுவனங்களை மிஞ்சும், விதத்தில் இஸ்லாமிய அமைப்புகள். - ஜெயலலிதா பாராட்டு.

அரச  நிறுவனங்களை  மிஞ்சும் விதத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சென்னை  மக்களுக்காக  நிவாரண  பணிகள் ஆற்றி வருகின்றனர்.

சென்னையில் இருந்து இன்று நள்ளிரவு முதல் அனைத்து ரெயில்களும் இயங்கும்.

சென்னையில்  மழை  சற்று ஓய்ந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாக முடங்கியிருந்த ரெயில் போக்குவரத்து சீரடையத் தொடங்கி உள்ளது.

சென்னை வெள்ள நிவாரணத்துக்கு சிங்கப்பூர் அரசு ரூ.50 லட்சம் ரூபாய் நிதியுதவி.

சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு தொடர்பான துயர்துடைப்பு நிவாரணப் பணிகளுக்காக 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. 

சென்னையில் ஒரு மெழுகுவர்த்தி ரூ.60–க்கு விற்பனை: கத்திரிக்காய் கிலோ ரூ.120

சென்னையில் இனி மழை அளவு குறைந்து விடும் என்று வானிலை இலாகா கூறி  வருகின்ற போதிலும் மக்களிடம்  நம்பிக்கை  ஏற்படவில்லை.

பல லட்சம் கொடுத்து பேராசையால் ஏமாந்த மக்களே....

10 லட்சம்  கூட  மதிப்பு பெறாத வீட்டை 50 லட்சம், 70 லட்சம் என்று கொடுத்து நாளைக்கு 1 கோடி  ஆகும்,  5 கோடி  ஆகும்  என்று பேராசை கொண்டு  ஏமாந்த மக்களே....

வெள்ள நிவாரணத்தில் இஸ்லாமியர்களின் செயல் பற்றி மாற்றுமத சகோதரர்கள் சொன்னது. புகைப்படங்கள் இணைப்பு.

டிவி யில் மீட்புப் பணிகள் நடைபெறுவதை உணவு, பால், நீர் தரப்படுவதைக் காட்டுகிறார்கள் .. மீட்பு  நடவடிக்கை  ஊடக வீடியோக்களில் களப்பணியில் முஷ்லிம்கள் இல்லாத வீடியோவே இல்லை. கடைசிக்கு 2 டொப்பியாவது தென்படுகிறது. பொதுத் தொண்டில் ,.வாழ்க முகமதிசம்..,


வெள்ளி, 4 டிசம்பர், 2015

ஏ. ஆர் ரகுமானின் சகோதரியோடு இணைந்து கனடிய தமிழ்பெண்கள் தயாரிக்கும் தமிழ் திரைப்படம்.

கனடாவில் வர்த்தகத் துறையில் பிரகாசித்து வரும் இரண்டு தமிழ் பேசும் பெண்மணிகள், உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமானின் சகோதரி  திருமதி ரெஹேனாவுடன் கூட்டுச் சேர்ந்து மூன்று பெண்மணிகளும்  தமிழ் திரைப் படம்  ஒன்றை தயாரித்து வருகின்றனர். 

முத்துப்பேட்டையில் கனமழையால் மீன் மார்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது.

மூடப்பட்ட விமான நிலையத்தை திறக்க அனுமதி: சென்னையில் இருந்து நாளை விமானங்கள் இயக்கம்.

சென்னையில் கனமழை மற்றும் வெள்ளத்தினால் விமான போக்குவரத்து முற்றிலுமாக  முடங்கியது. விமானங்கள் ஞாயிறு வரையில் இயக்கப்படாது  என்று அறிவிக்கப்பட்டது.

வியாழன், 3 டிசம்பர், 2015

முத்துப்பேட்டை மக்களின் பயன்பாட்டிற்கு உதவும் குளங்களின் அவல நிலை.


இப்படி குப்பை மேடாக காட்சியளிக்கும்                      இடம்  நமது  முத்துப்பேட்டை  ஊருக்கு நடுவே இருக்கும் குண்டான் குளம்தான்   இது.

வேதாரண்யம் அருகே நல்ல பாம்புக்கு பயந்து பரண் கட்டி வாழ்ந்து வரும் பள்ளி மாணவன்.

நாகை மாவட் டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் காந்தி நகரை சேர்ந்த பெயின்டர் நவமணியன். திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இந்திரா. விவசாய   தொழிலாளி.

முத்துப் பேட்டையில் நேற்று பெய்த மழையின் அளவு 175.9 மி.மீ.,

நாகை மாவட்டத்தில் நேற்று முன் தினம் மதியம் முதல் இரவு வரை இடை விடாமல் மழை பெய்தது. நேற்று காலை முதல் மழை பெய்ய வில்லை. வானம் மேக மூட்டத்துடன் காணப் பட்டது. 

புதன், 2 டிசம்பர், 2015

தற்போதைய செய்தி. சென்னை விமான நிலையம் டிசம்பர் 6-ம் தேதி வரை மூடப்படுகிறது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக இடைவிடாமல் மழை பெய்து வருவதால் பஸ் போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து  முடங்கியுள்ளது.

தொடர் மழையால் சின்னாபின்னமானது சென்னை: சாலை போக்குவரத்து கடும் பாதிப்பு - மெட்ரோ ரெயில்களில் வரலாறு காணாத கூட்டம்

சென்னை  நகருக்கு தேவையான குடிநீரை தேக்கிவைக்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு சுமார் 30 ஆயிரம்  கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதால்  அடையாற்றின் குறுக்கே செல்லும்

மழையால் பாதிக்கப்பட்ட மக்களை அரவணைக்கும் பள்ளிவாசல்கள், தியேட்டர்கள்!


சென்னையில்  நேற்று முதல் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இன்னும் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை  அடையாறு,  கூவம்  ஆறுகளில்  வெள்ளம் பெருக்கெடுத்து  ஓடுகிறது.

பள்ளியிலேயே குழந்தை பெற்ற 9ம் வகுப்பு மாணவி. ஐதராபாத்தில் பரபரப்பு.

ஐதராபாத்தின் மாதாபூர்  பகுதியில்  அரசு மேல் நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படிப்பவர் ரோஜா (14, பெயர் மாற்றப் பட்டுள்ளது). கடந்த சனிக்கிழமையன்று வகுப்பில் இருந்த ரோஜாவுக்கு, வயிறுவலி ஏற்பட்டுள்ளது.

செவ்வாய், 1 டிசம்பர், 2015

தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத இஸ்லாமிய குடும்பத்தினர் திரையரங்கிலிருந்து வெளியேற்றம்: வலுக்கும் கண்டனம். வீடியோ இணைப்பு.


சினிமா திரையரங்கில் இந்திய தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்ட போது, எழுந்து நிற்காத இஸ்லாமிய குடும்பத்தை, அங்கிருந்தவர்கள் திரையரங்கை விட்டு வெளியேற்றிய  சம்பவம் நாடு முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல் முடிவு


அரசு  பொதுத்துறை  நிறுவனமான பி.எஸ்.என்.எல்  'ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா' நிர்வகித்து வரும்  விமான  நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அந்நிறுவனத்தின் தலைவர் அனுபம் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் உதவியால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மாணவர் மீட்பு

பழைய வண்ணாரப்பேட்டை சீனிவாசபுரம் 2–வது தெருவைச் சேர்ந்தவர் முகமது  ஜிலானி. இவரது 2–வது மகன் முகமது நியாஸ் (13). 6–ம் வகுப்பு படித்து வருகிறான்.

முத்துப்பேட்டையில் தமுமுக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கல்

முத்துப்பேட்டை  நகர தமுமுக  சார்பாக ஆசாத் நகர் கடைதெருவில் பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும்  நிகழ்ச்சி மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்  தீன் முகம்மது தலைமையில் நடைபெற்றது. 

திங்கள், 30 நவம்பர், 2015

அதிரை அருகே நடந்த கார் விபத்தில் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய த.மு.மு.க மூத்த தலைவர் ஹைதர் அலி.

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே நேற்று காலை நடந்த கார் விபத்தில்  பலரும் காயம் அடைந்தனர். இதில் காரில் பயணம் செய்த த.மு.மு.க  மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஹைதர் அலி சிறு  காயங்களுடன்  அதிர்ஷ்ட வசமாக  உயிர் தப்பினர்.

மின்சாரம் உற்பத்தி செய்யும் மிதிவண்டி சாதனம்: ரூ.12,000 ரூ.15,000 விலையில் மார்ச் மாதம் சந்தைக்கு வருகிறது

‘பெடல்’ செய்வதன் மூலம் மின் சாரம் உற்பத்தி செய்யும் நிலையான மிதிவண்டி சாதனத்தை அமெரிக்க வாழ் இந்திய தொழிலதிபரும் கொடையாளருமான  மனோஜ் பர்கவா அறிமுகம் செய்துள்ளார்.

பொறியியல் படிக்கும், படிக்க இருக்கும் மாணவர்களுக்கு...

கடந்த 10 ஆண்டுகளாக நாம் பங்கேற்ற கல்வி நிகழ்ச்சிகள் அனைத்திலும் தொடர்ச்சியாக ஒரு கருத்தை  முன் வைத்து வந்துள்ளோம்.....

இன்னும்  சில ஆண்டுகளில் உலகின் பெரும்பாலான      நாடுகள்  தங்கள் மின் தேவைக்கு சூரிய ஒளி ஆற்றலுக்கு  (Solar)  மாறிவிடும்.

முத்துப்பேட்டை அருகே மாயமான மாணவி ஈரோட்டில் மீட்பு.

முத்துப் பேட்டை அருகே மாயமான மாணவி ஈரோட்டில் மீட்கப் பட்டார். திருவாரூர் மாவட்டம்  முத்துப் பேட்டை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த  10 வகுப்பு  மாணவி  கடந்த  26ம்  தேதி  மாயமானார். 

ஞாயிறு, 29 நவம்பர், 2015

வை–பைக்கு மாற்றாக வருகிறது லை–பை

இணைய தளத்தில் வயர் இணைப்பு இல்லாமல்  பயன்படுத்துவதற்காக  ‘வை–பை’ என்ற தொழில் நுட்பம் உள்ளது.

முத்துப்பேட்டையில் பறவை வேட்டை 6 பேருக்கு அபராதம்.

முத்துப் பேட்டையில் பறவைகளை வேட்டையாடிய 6 பேருக்கு அபராதம் விதிக்கப் பட்டது.

திருவாரூர் மாவட்டம், முத்துப் பேட்டை பகுதியில் வட கிழக்கு பருவ மழை  தொடங்கியுள்ளதையடுத்து   ஏராளமான   பறவைகள்   குவிந்துள்ளன.

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...