ஐக்கிய நாடுகள், உலக வங்கி மற்றும் உலக சுகாதார நிறுவனம் இணைந்து “சுகாதாரமான நாடுகள்” என்ற ஆய்வை மேற்கொண்டன.
பிறப்பு, இறப்பு மற்றும் இறப்புக்கான காரணம், இளம் வயதினரிடையே நிலவி வரும் புகைப்பிடிக்கும் பழக்கம், அதிக கொழுப்பு சத்து காரணமாக ஏற்படும் பாதிப்புகள், நோய் தடுப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் காய்கறிகள், பழங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களை உட்கொள்ளுதல் ஆகியவற்றின் அடிப்படையிலும் ஆய்வு நடத்தப்பட்டது. சுமார் 10 லட்சம் மக்களிடையே ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வின் முடிவுகளை கொண்டு சுகாதாரமான நாடுகள் பட்டியலை ஐக்கிய நாடுகள், உலக வங்கி மற்றும் சுகாதார நிறுவனம் ஆகியவை சமீபத்தில் வெளியிட்டன.
இந்த பட்டியலில் 89.45 சதவீதம் பெற்று சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. 89.07 சதவீதம் பெற்று இத்தாலி சுகாதார நாடுகள் பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. 88.33 சதவீதத்துடன் ஆஸ்திரேலியா 3வது இடத்தை பிடித்துள்ளது.
ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளே ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் அதிக இடம் பிடித்துள்ளன. வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளின் பெயர்கள் முதல் 20 இடங்களின் பட்டியலில் இடம் பெறவில்லை.
மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேலின் பெயர் மட்டுமே முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்தின் பெயர் கூட முதல் 20 இடங்களில் இல்லை.
இந்தியா 22.17 சதவீததத்துடன் உலக சுகாதார நாடுகள் பட்டியில் 103வது இடத்தை பெற்றுள்ளது. பெரும்பாலான ஆப்ரிக்க நாடுகளின் பெயர்கள் பட்டியலில் கடைசி 10 இடங்களில் உள்ளன. 0.26 சதவீதத்துடன் சுவிட்சர்லாந்து கடைசி இடத்தில் உள்ளது.
தீபாவளி கொண்டாடும் சிங்கப்பூர்...
புகைப்படம். முத்துப்பேட்டை ஜாகிர் உசேன்.











கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக