செவ்வாய், 10 நவம்பர், 2015

உலகின் முதல் சோலார் விமான நிலையமாக மாற்றப்பட்ட கொச்சி விமான நிலையம். புகைப்படங்கள் இணைப்பு.



உலகிலேயே முதன் முறையாக முழுக்க சூரிய சக்தியாலேயே இயங்கும் விமான நிலையமாக கொச்சி விமான நிலையத்தை மற்றியுள்ளது கேரள அரசு.


கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் அதிகரித்துவரும் மின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்ய முடிவு செய்தது.

இதனையடுத்து கடந்த 2013-ல் 100 கிலோவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட சோலார் பிளான்டை விமான நிலையத்தின் அரேவல் டெர்மினல் பிளாக்  கட்டிடத்தின்  கூரையில் அமைத்தது.

இது வெற்றிகரமாக அமைந்ததை அடுத்து, தற்போது விமான நிலையம் முற்றிலுமாக  சோலார்  மயமாக்கப்பட்டுள்ளது.

கொச்சி விமான நிலையத்தின் சரக்கு பரிமாற்ற பகுதி அருகே 12 மெகாவாட் சோலார்  பிளாண்டை  கேரள  அரசு  அமைத்துள்ளது.

சுமார் 45 ஏக்கர்கள் நிலப்பரப்பில் 46 ஆயிரம் சோலார் பேனல்கள் இங்கு நிறுவப்பட்டிருப்பது  குறிப்பிடத்தக்கது.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...