முத்துப் பேட்டை அருகே சாலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. இதில் குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப் பேட்டை ஆசாத் நகரை சேர்ந்தவர் மன்சூர் (37). ஆட்டோ டிரைவரான இவர் ஆசாத் நகர் பகுதியிலிருந்து ஒரு குடும்பத்தினரை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு நாச்சிக் குளம் என்ற ஊருக்கு சென்றார்.
முத்துப் பேட்டை அருகே ஆலங்காடு கடைத் தெரு அருகில் ஆட்டோ செல்லும் போது அதே ஊரைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் காமராஜ் என்பவர் பைக்கில் குறுக்கே சென்றார். இதனால் டிரைவர் ஆட்டோவை நிறுத்த முயன்ற போது நிலைத் தடுமாறி சாலை ஓரம் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்ததில் சாத் (24), அவரது குழந்தை நிசாரா (8), அவரது அக்கா மகன்கள் அர்சித் (2), ஹனீப் (5), மாமியார் ஹைருன் நிஷா (50), இவரது தங்கை ஹசீனா (48) மற்றும் ஆட்டோ டிரைவர் மன்சூர், பைக்கில் வந்த வங்கி ஊழியர் காமராஜ் ஆகிய 8 பேர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அனைவரும் மீட்கப் பட்டு ஆம்புலன்ஸ் மூலம் முத்துப் பேட்டை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக் கோட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர்.
இது குறித்து முத்துப் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக