வெள்ளி, 13 நவம்பர், 2015

வங்காளதேசத்தில் இரட்டைத் தலையுடன் பிறந்த பெண் குழந்தையை காண அலைமோதும் கூட்டம்.

வங்காளதேசத்தில் உள்ள பிரஹ்மன்பாரியா பகுதியில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளியான ஜமால் மியா என்பவரின் மனைவிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை இரட்டைத் தலையுடன் காணப்பட்டது. 


இந்த குழந்தை பிறந்த செய்தி கேள்விபட்ட மக்கள் குழந்தையைக் காண திரண்டனர்.  ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால்  மக்களை கட்டுப்படுத்த முடியாமல்  ஆஸ்பத்திரி  நிர்வாகம்  திணறி வருகிறது. 

இரண்டு தலைகளுடன் பிறந்த இந்த குழந்தை, இரண்டு மூக்குகளின் நான்கு துவாரங்கள்  வழியாக  சுவாசித்து வருவதாகவும், இரு வாய்களின் மூலம் பால்  குடிப்பதாகவும் பரவிய செய்தியை கேட்டு அந்த ‘அதிசய குழந்தையை’ பார்ப்பதற்கு தலைநகர் டாக்காவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியை  ஏராளமான  மக்கள்   முற்றுகையிட்டு  வருகின்றனர். 

சுவாசக் கோளாறுக்காக தீவிர சிகிச்சை பகுதியில் சேர்க்கப்பட்டுள்ள இந்த குழந்தையும்,  அதை ஈன்றெடுத்த  தாயும் நல்ல நிலையில் இருப்பதாக டாக்கா  அரசு  ஆஸ்பத்திரி  டாக்டர்கள்  தெரிவித்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...