வெள்ளி, 13 நவம்பர், 2015

பாலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்தது தென் அமெரிக்க நாடுகள் :

பாலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்தது தென் அமெரிக்க நாடுகள் : ரியாத் உச்சி மாநாட்டில் பிரகடனம்.....!!


உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின்  தலைநகர்  ரியாத்தில் அரபு நாடுகள் மற்றும் தென் அமெரிக்க  நாடுகளின்  உச்சி மாநாடு  நடைபெற்றது.

மாநாட்டில்  சவூதி அரேபிய மன்னர் சல்மான் உள்ளிட்ட அனைத்து நாடுகளின்  தலைவர்களும்  கலந்து  கொண்டனர்.

தென் அமெரிக்க நாடுகளான  அர்ஜெண்டினா, பிரேஸில் உருகுவே, பெரு, சிலி, ஈக்வடார், பொலிவியா, பராகுவே ஆகிய நடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

தென் அமெரிக்க நாடுகள் பாலஸ்தீனை தனி இஸ்லாமிய நாடாக அங்கீகரிப்பதாக மாநாட்டின் மூலம் உலக நாடுகளுக்கு பிரகடனம் செய்யப்பட்டது.

இறைவனின் அருளால் சல்மான் அவர்கள் பாலஸ்தீனுக்கு ஆதரவாக சர்வதேச சமூகத்தை ஒன்றிணைத்து வருகிறார். கடந்த மாதத்தில் ஐநா வாசலில் அனைத்து நாடுகளின் கொடிகளுடன் பாலஸ்தீன் கொடியும் ஏற்றப்பட்டது.

மேலும் பாலஸ்தீன் மீது இஸ்ரேல் அரங்கேற்றி வரும் அத்துமீறல்களுக்கு கடும் கண்டனங்களும் பதிவு செய்யப்பட்டது.

அரபு நாடுகளும், ஆசிய நாடுகளும் ஏற்கனவே பாலஸ்தீனுக்கு ஆதரவாக இருந்து வரும் நிலையில் தென் அமெரிக்க நாடுகளும் பாலஸ்தீனுக்கு ஆதரவாக  பிரகடனம்  செய்துள்ளது.

சவூதி அரேபிய மன்னர் சல்மான் அவர்கள் ஆட்சி பொறுப்பை ஏற்ற போது உலக  முஸ்லிம்களை  பாதுகாப்பது தமது கடமை என்றும் அதிலும் குறிப்பாக  பாலஸ்தீன்  மக்களை  காப்பது முதலாவது என்றும் இதற்காக தாம் உறுதி  பூண்டுள்ளதாகவும்  கூறியிருந்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...