முத்துப் பேட்டை ஜமாலியா தெருவை சேர்ந்தவர் பாவா பகுருதீன். இவர் கொத்பா பள்ளி வாசல் அருகே ஹோட்டல் நடத்தி வருகிறார்.
கடந்த மாதம் 14ம் தேதி இவரது வீட்டின் பின் பக்கம் வழியாக நுழைந்து பீரோவில் இருந்த ஐந்தரை பவுன் நகைகளை
மர்ம நபர் திருடிச் சென்று விட்டார். இது குறித்து முத்துப் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் முத்துப் பேட்டையில் உள்ள ஒரு கடையில், ஒருவர் திருடப்பட்ட நகைகளை விற்க முயன்ற போது முத்துப் பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ் குமார் தலைமையில் குற்றப் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ரவிச்சந்திரன், போலீசார் சுரேஷ். சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோர் அந்த நபரை பிடித்து கைது செய்தனர்.
விசாரனையில் அவர் முத்துப் பேட்டை அடுத்த பேட்டை புது மாதா கோவில் தெருவை சேர்ந்த பூமி நாதன் மகன் மதி என்கிற மதியழகன்(28) என்றும், கொத்தனாராக பணியாற்றி வருவதும், இவர் பாவா பகுருதீன் வீட்டில் திருடிய நகைகளை விற்க முயன்றதும் தெரிய வந்தது.
பின்னர் மதியழகனை போலீசார் திருத்துறைப் பூண்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 5 பவுன் நகை பறிமுதல் செய்யப் பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக