முத்துப் பேட்டையில் சலவை தொழிலாளியை தாக்கிய தெற்குத் தெரு அசரப் அலியை போலீசார் கைது செய்தனர்.
முத்துப் பேட்டை அடுத்த செம்படவன் காடு கிராமத்தை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம் மகன் தனபால் (40). சலவை தொழிலாளி. இவர் முத்துப் பேட்டை தெற்குத் தெரு அரபு
சாஹிப் பள்ளி வாசல் அருகே சலவை கடை வைத்துள்ளார்.
நேற்று முன் தினம்
தனபாலின் சலவை கடைக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஷேக் நூர்தீன் மகன் அசரப் அலி (32)
என்பவர் முன் விரோதம் காரணமாக தனபாலிடம் தகராறு செய்து அவரை சரமாரியாக
தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து
முத்துப் பேட்டை காவல் நிலையத்தில் தனபால் கொடுத்த புகாரின் பேரில் போலீசார்
வழக்குப் பதிவு செய்து அஷரப் அலியை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக