திங்கள், 5 அக்டோபர், 2015

திருச்சி விமானநிலையத்தில் பெண் பயணி தவற விட்ட நகைப்பை திரும்ப ஒப்படைப்பு. ஒப்பந்த தொழிலாளர்களின் நேர்மை.


திருச்சி விமான நிலையத்தில் பெண் தவற விட்ட நகை பையை கண்டெடுத்த ஒப்பந்த தொழிலாளர்கள் அதை திரும்ப ஒப்படைத்தார்.



துபாயில் இருந்து ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன் தினம் நள்ளிரவு 1 மணிக்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகள் மற்றும் ஆவணங்களை வான் நுண்ணறிவு மற்றும் இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சோதனை முடிந்து அனைத்து பயணிகளும் தங்களது உடமைகளை ட்ராலியில் வைத்து வருகை பகுதி வழியாக வந்தனர். பின்னர் ட்ராலியை வருகை பகுதியில் வைத்து விட்டு உடமைகளை எடுத்து கொண்டு சென்று விடுவது வழக்கம்.

அதே போல ஏர் இண்டியா விமானத்தில் வந்த பயணிகளும் உடமைகளை எடுத்து கொண்டு ட்ராலியை விட்டு சென்றனர். விட்டு சென்ற ட்ராலியை ஏர் போர்ட்டில் ஒப்பந்த முறையில் பணி புரியும் தொழிலாளர்கள் தள்ளிக் கொண்டு புறப்பாடு பகுதிக்கு வந்தனர். 

அப்போது ஒப்பந்த தொழிலார்கள் சண்முகம், நாகராஜ் ஆகியோர் தள்ளிக் கொண்டு வந்த ட்ராலியில் கைப்பை ஒன்று இருந்தது. அதை திறந்து பார்த்த போது பணம், நகை, பாஸ்போர்ட் உள்ளிட்ட சில ஆவணங்கள் இருந்தது.

இதையடுத்து இருவரும் பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ஏர் போர்ட் டெர்மினல் மேலாளர் இளங்கோவனிடம் கைப்பையை ஒப்படைத்தனர்.

இதை தொடர்ந்து கை பையில் இருந்த செல்போன் மற்றும் முகவரியை வைத்து விசாரணை நடத்தியதில் திருச்சியை சேர்ந்த ஜோதிலெட்சுமி (47) என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. ஜோதிலெட்சுமி அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரத்தை சேர்ந்த தனது மருமகன் பால சுப்ரமணியனுடன் துபாயில் இருந்து திருச்சி வந்த போது உடமைகளை ட்ராலியில் எடுத்து வந்த போது கை பையை மட்டும் அவசரத்தில் விட்டு சென்றது தெரிய வந்தது.

திருச்சி விமான நிலையத்திற்கு ஜோதி லெட்சுமி, அவரது மருமகன் பாலசுப்ரமணியன் வரவழைக்கப் பட்டு கைபை ஒப்படைக்கப்பட்டது. அதில் ரூ.12,000 ரொக்கம், 31/2 பவுன் நகை, பாஸ்போர்ட் மற்றும் சில ஆவணங்கள் இருந்து தெரிய வந்தது. 

ட்ராலி தொழிலாளர்கள் சண்முகம், நாகராஜ் நேர்மையை விமான நிலைய அதிகாரிகள் உள்பட அனைவரும் பாராட்டினர். இருவருக்கும் வெகுமதி அளித்து ஜோதிலெட்சுமி நன்றி கூறினார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...