செவ்வாய், 6 அக்டோபர், 2015

ஏர்போர்ட்டில் திருடப்பட்ட செல்போன்கள் பிளிப்கார்ட்டில் விற்பனை.


டெல்லி விமான நிலையத்திலிருந்து செல்போன்களைத் திருடி பிளிப்கார்ட்  இணையதளத்தின் மூலம் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


விமான நிலையத்தின் கார்கோவிலிருந்து அவர்கள் செல்போன்களைத் திருடியதைக் கண்டுபிடித்த விமான நிலைய அதிகாரிகள் போலீசில் புகாரளித்ததையடுத்து, அவர்களைக் கைது செய்துள்ள போலீசார், அவர்களிடமிருந்து 209 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இந்த செல்போன்களை டெல்லி விமான நிலையத்திலிருந்து அவர்கள் திருடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மைசூரு, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட இடங்களிலிருந்து இப்படி விற்கப்பட்ட திருட்டு செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. அப்போது இந்த செல்போனை வாங்கியவர்கள் தாங்கள் இதை பிளிப்கார்ட்டிலிருந்து வாங்கியதாகக் கூறி அதற்குரிய பில்லையும் போலீசாரிடம் காண்பித்தனர்.

 இந்த திருட்டு  சம்பவத்திற்கு  ஒருசில  கார்கோ ஊழியர்களே  உறுதுணையாக  இருந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், பிளிப்கார்ட் ஏஜெண்டுகள் மூலமாக இந்த விற்பனை  நடைபெற்றதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் பிளிப்கார்ட்டின் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், "எங்களது 40,000-க்கும்  மேற்பட்ட  விற்பனையாளர்களில்  ஒவ்வொருவரும்   கடுமையான ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்றி நடக்கின்றனர். ஒரு சில ஏஜெண்டுகளால் இந்த விற்பனை தவறுதலாக நடைபெற்றுள்ளது. இதுகுறித்து  கடுமையான  நடவடிக்கை  எடுப்போம்."  என்று  தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து விளக்கமளிக்குமாறு பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு டெல்லி காவல்துறை  நோட்டீஸ்  அனுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...