சனி, 10 அக்டோபர், 2015

இராமேஸ்வரத்திலிருந்து டெல்லிக்கு தனியாக முச்சக்கர மிதிவண்டியில் முதியவர் பயணம்.

கோவை மேட்டுபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் ( வயது 82 ) காந்தியவாதியான இவர் தனியார் மில் ஒன்றில் சூப்பர் வைசராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்


இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் ஒன்றாக இணைக்கக்கோரி இந்திய ஜனாதிபதி திரு பிரணாப் முகர்ஜியை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பதற்காக தன்னந்தனியாக மூன்று சக்கர சைக்கிளில் டெல்லி பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதிரை ஈசிஆர் சாலை  வழியே  சைக்கிள் பயணம் மேற்கொண்டு வரும் கிருஷ்ணன்  கூறியதாவது:

இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் ஒன்றாக இணைப்பது அவசியம்.  இதனால் நாடு  செழிக்கும்.  விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர்

நதிநீர் இணைப்பை நிறைவேற்ற வலியுறுத்தி முதன்முறையாக கடந்த 2000 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்திலிருந்து டெல்லிக்கு 53 நாட்கள் பயணம் மேற்கொண்டேன்

இதைதொடர்ந்து இரண்டாவது பயணமாக கடந்த 2002 ஆம் ஆண்டு கன்னியாகுமரிலிருந்து டெல்லிக்கு 65 நாட்கள் பயணம் மேற்கொண்டேன்

நான் மேற்கொண்ட இரண்டு டெல்லி பயணங்களிலும் அப்போதைய பொறுப்பில் இருந்த இந்திய ஜனாதிபதியை நேரடியாக சந்திக்க இயலவில்லை. எனது நெடுந்தூர சைக்கிள் பயணம் தோல்வியில் முடிந்தது. பெரும் எமாற்றுத்துடன் ஊர் திரும்பினேன். எனினும்  எனது  முயற்சியிலிருந்து  பின்வாங்க வில்லை.

நான் இப்போது மூன்றாவது முறையாக டெல்லிக்கு மூன்று சக்கர சைக்கிளில் பயணம் மேற்கொண்டு வருகிறேன். கடந்த 01-10-2015 அன்று இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு ஈசிஆர் சாலை வழியாக தற்போது அதிராம்பட்டினம் வந்துள்ளேன்

பின்னர் பெங்களூர், ஐதராபாத், நாக்பூர், குவாலியர், ஆக்ரா வழியாக டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளேன். என்னுடைய நியாமான கோரிக்கை  ஏற்றுக்கொள்ளும் வரை எனது முயற்சி தொடரும்' என்றார்.

அதிராம்பட்டினம் வந்தடைந்த முதியவர் கிருஷ்ணனை அதிராம்பட்டினம்  ரெட் கிராஸ்  சொசைட்டி   சேர்மன்  இத்ரீஸ் அஹமது வரவேற்றார். இவரது பயணத்தை பாராட்டி சால்வை அணிவித்து வழியனுப்பி வைத்தார்

தகவல் அதிரை செய்திகள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...