ஞாயிறு, 4 அக்டோபர், 2015

துபாயில் விபத்தில் பலியான தமிழ் தம்பதிகளின் 10 மாத குழந்தையை நலம் விசாரித்தார் போலீஸ் உயிர் அதிகாரி:


நாமக்கல் காமராஜர் நகரில் வசித்து வரும் ராஜேந்திரன், பழனியம்மாள் தம்பதியின்   ஒரே   மகன்  பிரிவித்தி ராஜன்.


துபாயில் பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்தார். அவர்  தனது  மனைவி  மற்றும் 10 மாத குழந்தையுடன் கடந்த சனிக்கிழமை நண்பர்களுடன் சுற்றுலா சென்றார். 

அப்போது  வேன்  விபத்தில் சிக்கி பிரிவித்தி ராஜன், அவரது மனைவி வினிஷா  உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 மாத அதிசயமாக உயிர் தப்பியது. அந்த குழந்தைக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டதால் சார்ஜாவில் உள்ள தவாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

பெற்றோரை இழந்து தவிக்கும் அந்த  10 மாத குழந்தையை காண சார்ஜாவின் போலீஸ் உயிர் அதிகாரி நேரில் வந்து நலம் விசாரித்தார். அதோடு அக்குழந்தையின் சிகிச்சை பற்றியும் கேட்டறிந்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...