திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை ஆகிய நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது.
நேற்று முன் தினம் இரவு 11.30 மணிக்கு திருச்சியில் இருந்து மலேசியா தலைநகா் கோலாலம்பூருக்கு ஏா்ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் செல்லும் பயணிகளின் ஆவணங்களை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது புதுக் கோட்டை மாவட்டம் குலமங்கலம் நச்சவத்திப்பட்டியை சேர்ந்த சுப்பையா மகன் ராஜேந்திரன் (45) என்பவர், ராம நாதபுரம் மாவட்டம் அவராந்தல் மறனூா் முருகேசன் மகன் கருப்பையா (45) என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் எடுத்து மலேசியா செல்ல முயன்றது கண்டுபிடிக்கப் பட்டது.
இதையத்து ராஜேந்திரனை பிடித்து ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக