சனி, 10 அக்டோபர், 2015

சவுதி அரேபியாவில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட உதவி.


குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டு வேலை செய்து பொருளாதாரத்தை தேடிக்கொள்ளும் நோக்கத்தோடு வட ஆற்காடு மாவட்டம், காட்பாடி அருகே வெண்ணம்பள்ளி என்னும் ஊரை சேர்ந்த முனிரத்தினம் என்பவரின் மனைவி கஸ்தூரி எனும் பெண்மணி சவூதி அரேபியா தலைநகர் ரியாத்திற்கு வந்தார்.


 அவர் வேலை செய்யும் இடத்தில் பல்வேறு துன்புறுத்தல்களை சந்தித்துள்ளார். இதன் காரணமாக அவர் அங்கிருந்து தப்பித்து செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 அவர் ஜன்னலில் துணியை கட்டி குதிக்கும்போது தன்னுடைய முதலாளியால் கை வெட்டப்பட்டதாகவும்; உயரத்திலிருந்து கீழே குதித்ததால் கால் மற்றும் முதுகில் முறிவு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

 இந்த விஷயம் இந்தியன் சோசியல் போரம் ரியாத் - தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் நிர்வாகிகளின் கவனத்திற்கு வந்தது. 

உடனே களத்தில் இறங்கிய இந்தியன் சோசியல் போரம் தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் பொதுச்செயலாளர் இஞ்சினியர் ரஷீத் கான், செயலாளர் சர்தார், மாவட்ட தலைவர் ராஜ் முஹம்மத் ஆகியோர் கிங்டம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கஸ்தூரி அவர்களையும் மருத்துவமனை நிர்வாகிகளையும் சந்தித்து விபரங்களை கேட்டறிந்தனர். 

உடனடியாக இந்திய தூதரக நிர்வாகிகளை சந்தித்து இந்த விசயத்தில் சட்ட ரீதியான பிரச்சினைகள் இருப்பதால் உயர் அதிகாரிகள் நேரடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதியை பெற்று தரும்படியும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும்படியும் வற்புறுத்தினர்.

 அதை ஏற்றுக்கொண்ட இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் திரு .அணில் அவர்கள் இந்தியன் சோசியல் போரம் நிர்வாகிகளோடு இணைந்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

இது போன்று பல்வேறு சமூக நலப்பணிகளை செய்துவரும் இந்தியன் சோசியல் போரத்தின் பணிகள் பாதிக்கப்பட்ட கஸ்தூரி அவர்களுக்கும் நீதியை பெற்று தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்வதில் முஸ்லீம் அமைப்புகள் தயங்காது என்பதை நிரூபித்திருக்கிறது இந்த அமைப்பு.

தகவல்...நெல்லை முஹம்மது லெப்பை.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...