வெள்ளி, 9 அக்டோபர், 2015

363 கிலோ எடையுள்ள மனிதனை துரத்தியது மருத்துவமனை! ஏன்?.....


ருசிக்காக வித விதமான உணவு உட்கொள்வதில் தவறில்லை! அதிலும் எவ்வளவு உண்ண வேண்டும், என்பதில் கவனம் வேண்டாமா?



அமெரிக்காவின் ரோட் ஐலேண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டீவன் அசான்ட்டி (33) அதீத உடல் எடையால் நடமாட முடியாமல், உயிரையே இழக்கும் அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்

இந்நிலையில், தனது எடையில் சுமார் 250 கிலோ எடையை கட்டுப்பாடான உணவுடன், குறைத்துக்கொள்ள விரும்பி இந்நகரின் மருத்துவமனையில், சேர்ந்தார்.

சுமார் 80 நாட்களாக, இம்மருத்துவமனையில் வழங்கும் கொடுக்கப்பட்ட உணவுகளையே உட்கொண்டு வந்தார். சமீபத்தில், தனக்கு பிடித்தமான, பீட்சாவை ருசிக்கும் ஆசை துளிர்விட்டது. இதையடுத்து, பீட்சா கடையொன்றுக்கு  தொடர்பு கொண்டு பிடித்த பீட்சாவை ஆர்டர் செய்தார்.

பீட்சா டெலிவரி செய்ய வந்தவரை கவனித்த, மருத்துவமனையின் செவிலியர், மருத்துவர் மற்றும் இதன் நிர்வாகிகளிடம், இச்செய்தியைத் தெரிவித்தனர். இதனால்,  மருத்துவமனையின்  கட்டுப்பாடுகளை மீறி பீட்சாவை  வரவழைத்த  ஸ்டீவனை  நிர்வாகம்  வெளியேற்றியுள்ளது.

இதனால், புகலிடமின்றி தனது தந்தையின் எஸ்.யூ.வி. காரில் வாழ்ந்து வருகிறார். தற்போது இவருக்கு நிரந்தரமான தங்குமிடத்தை சமூக சேவகர்கள்  தேடி  வருகின்றனர்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...