ஞாயிறு, 4 அக்டோபர், 2015

மினாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்திய ஹாஜிகளின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு: 78 பேர் மாயம்.


ஹஜ்  யாத்திரையின் நிறைவுக்கட்டமாக சவுதி அரேபியா நாட்டிலுள்ள மினா நகரில் கடந்த மாதம் சாத்தான் மீது கல் எறியும் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்திய ஹாஜிகளின் எண்ணிக்கை தற்போது  58  ஆக  உயர்ந்துள்ளது.



இந்த தகவலை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இவ்வாண்டு ஹஜ் யாத்திரைக்கு சென்ற இந்தியர்களில் 78 பேர் காணாமல் போனதாகவும், அவர்களை கண்டுபிடிக்க தேவையான அனைத்தையும் இந்திய வெளியுறவுத்துறை  அதிகாரிகள்  செய்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...