வியாழன், 8 அக்டோபர், 2015

தங்கமும் இல்லை, வைரமும் இல்லை, ஆனால் வாட்ச் விலை ரூ. 5.5 கோடி..!


தங்கமும் இல்லை, வைரக்கற்களும் பதிக்கப்படவில்லை. ஆனால், ஒரு ரிஸ்ட் வாட்ச் (கை கடிகாரம்) விலை ரூ. 5.5 கோடி (8.15லட்சம் டாலர்) என்றால், நம்பமுடியுமா உண்மையில் நம்பித்தான் ஆக வேண்டும்.


சுவிட்சர்லாந்தில் உள்ள ‘கிரியுபெல் போர்ஸ் (Greubel Forsey) எனும் சிறிய நிறுவனமே இந்த காஸ்ட்லியான குவாடுருபுல் டூர்பில்லியன் (Quadruple Tourbillon ) வாட்சை வடிவமைத்துள்ளது.

கிரியுபெல் போர்ஸ் நிறுவனத்தின் முக்கிய அடையாளமே குவாடுருபுல் டூர்பில்லியன் வாட்சுகளை (கை கடிகாரம்) தயாரிப்பதுதான். இதில் குவாடுருபுல் என்பது ஒருவாட்சுக்குள் நான்கு இயந்திரங்கள் மூலம் இயங்குவது. டூர்பில்லியன் என்பது, கைக்கடிகாரத்தில் உள்ள ஒரு வகையான தொழில்நுட்பம். இது உலகின் அனைத்து பகுதியில் மாறும் நேரத்தை 2.5 விநாடி துல்லியமாகக் காட்டும் தன்மையுடையது. குறிப்பாக சர்வதேச நேரத்தை துல்லியமாகக் காட்ட இந்த டூர்பில்லியன் கடிகாரம் பயன்படும்.

கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட குரியுபெல் போர்சே நிறுவனம், ஆண்டுக்கு 5 முதல் 18 குவாடுருபுல் டூர்பில்லியன் கடிகாரங்களை மட்டுமே தயாரித்து வெளியிட்டு வருகிறது.

இது குறித்து  குரியுபெல்போர்சே நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீபன் பேர்சே கூறுகையில், இந்த கை கடிகாரத்துக்கு இந்த விலை இருக்ககாரணமே அதில் உள்ள எந்திர வேலைப்பாடுதான். இந்த வாட்சை தயாரிக்க எங்கள் குழுவுக்கு 5 ஆண்டுகள் தேவைப்பட்டது.

அதாவது, ஒரு வாட்சுகள் இரு டூர்பில்லியன் எந்திரம் இருக்க வேண்டிய இடத்தில் 4 எந்திரங்கள் பொருத்தியுள்ளோம். அதாவது  உலகில் உள்ள எந்த நாட்டின் நேரத்தையும் 2.5 விநாடிகள் துல்லியமாகக் காட்டும் தன்மை கொண்டது.

 புவிஈர்ப்பு சக்தியால் பாதிக்கப்படாது.  மற்ற வாட்சுகளோடு இதை ஒப்பிடமுடியாது. இந்த வாட்சில் 534 பாகங்கள் உள்ளன. நுன்னோக்கியால்(மைக்ரோஸ்கோப்) பார்க்குமாறு ஒவ்வொரு பாகமும் 43.5 எம்.எம்.அளவு கொண்டது. குறைந்தபட்சம் 0.35 மில்லிமீட்டர் அளவும் இருக்கிறது.

 பெரும்பாலான பாகங்கள் எந்திரங்களால் வடிவமைக்கப்படாமல் கையால் தயாரித்துள்ளோம். இதன் தயாரிப்பு செலவு, காலநேரம் ஆகியவற்றை கருதி வாட்சுக்கு மிக அதிக விலை வைத்துள்ளோம் என்றார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...