இந்தியாவின்
மிகப்பெரிய தனியார் விமான சேவை
நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், தனது
வெளிநாட்டு விமான சேவைகளுக்கு 30 சதவீதம்
கட்டண குறைப்பு சலுகையை அறிவித்துள்ளது.
வெளிநாட்டு
விமான சேவையின் பிசினஸ் மற்றும் எக்கனாமி
கிளாஸ் டிக்கெட்டில் இந்த கட்டண குறைப்பு
செய்யப்பட்டிருக்கிறது. இன்று முதல் 6 நாட்களுக்கு இந்த சிறப்பு கட்டண சலுகை வழங்கப்படும்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உலகில்
உள்ள 73 நாடுகளுக்கு விமானங்களை இயக்கி வருகிறது. அதில்,
வளைகுடா நாடுகள், தெற்கு ஆசியா, தென்-கிழக்கு ஆசியா, அமெரிக்கா,
ஐரோப்பா மற்றும் கனடா நாடுகளுக்கு
செல்லும் அனைத்து விமான சேவைக்கும்
இந்த கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக
ஜெட் ஏர்வேஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள
செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
ஜெட் ஏர்வேசின் கூட்டு நிறுவனமான ஐக்கிய
அரபுக் குடியரசின், எதிஹாட் ஏர்லைன்ஸ் விமானங்கள்
மூலம் மத்திய கிழக்கு நாடுகள்,
ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்க மற்றும்
ஆஸ்திரேலிய ஆகிய நாடுகளுக்கு செல்லும்
பயணிகளுக்கும் இந்த சலுகை உண்டு
என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக