வெள்ளி, 9 அக்டோபர், 2015

முத்துப்பேட்டை அருகே நீதிமன்ற உத்தரவுப்படி 3.5 ஏக்கர் நிலத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு.

முத்துப் பேட்டை  மரைக்காயர்  தெருவை சேர்ந்த  அபுபக்கர்  மனைவி   வாகிதா அம்மாள். இவருக்கு சொந்தமான 3.5 ஏக்கர் விவசாய நிலம் முத்துப் பேட்டை  அடுத்த  செருப்பட்டாக்கரை  கிராமத்தில்  சாலை  ஓரம்  உள்ளது.


இதை 30 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சந்தானம் என்ற விவசாயி வாகிதா அம்மாளிடமிருந்து குத்தகைக்கு எடுத்துக் கொண்டு சாகுபடி செய்து வந்தார். இதற்காக வாகிதா அம்மாளுக்கு ஒப்பந்தப் படி சில வருடம்  நெல்  வழங்கினார்.

 பிறகு வாகிதா அம்மாளுக்கு நெல் கொடுக்காததால் சந்தானத்திமிருந்து இடத்தைத் திருப்பி கேட்ட போது அவர் மறுத்தார்.  இது தொடர்பாக திருவா ரூர்,  நாகை,  சென்னை   நீதி  மன்றங்கள்,  டெல்லி  சுப்ரீம் கோர்ட் ஆகியவற்றில்  வாகிதா  அம்மாள்  வழக்கு  தொடந்தார்

இதில்  இவருக்கு  சாதகமாகவே  தீர்ப்பு  வழங்கப் பட்டது. ஆனாலும் சந்தானத்தி டமிருந்து அந்த நிலத்தை அவரால் மீட்க முடியவில்லை. இந் நிலையில் சில வருடங்களுக்கு முன்பு சந்தானம் இறந்ததால் அந்த நிலத்தை அவரது மகன் திலீப் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ், ஜோசப், மரியதாஸ் ஆகியோர்  சாகுபடி  செய்து  வந்தனர்.

இந்த நிலையில் வாகிதா அம்மாள் ஏற்கனவே நீதி மன்றங்களில் வந்த தீர்ப்பை செயல் படுத்தக் கோரி மன்னார்குடி வருவாய் கோர்ட்டில் சமீபத்தில் மீண்டும் ஒரு வழக்கு தொடர்ந்தார்

இதில் வாகிதா அம்மாளுக்கு சொந்தமான இடத்தை வருவாய்துறை அளவீடு செய்து அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப் பட்டது.

இதனையடுத்து நேற்று காலை செருப்பட்டாக்கரை கிராமத்திற்கு மன்னார்குடி வருவாய் நீதி மன்ற அமலாக்க ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் முத்துப் பேட்டை வருவாய்  ஆய்வாளர்  முருகேசன், வி
ஏஓ  கமலதியாக ராஜன் மற்றும் வருவாய்  துறையினர் சென்று வாகிதா அம்மாளுக்கு சொந்தமான  இடத்தை  அளவீடு  செய்தனர்.

முத்துப் பேட்டை இன்ஸ் பெக்டர் ராஜ்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற் பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்அப்பொழுது சம்பவ இடத்திற்கு திலீப் மற்றும் அவருக்கு ஆதரவாக வந்த நூற்றுக்கும் மேற் பட்டோர் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று கூச்சலிட்டனர்.

பின்னர் சாலை மறியல் செய்யவும் முயற்சி செய்தனர். நீதி மன்ற உத்தரவுப் படி தற்பொழுது அளவீடு செய்யப் பட்டு வருகிறது. இதை தடுத்தால் உங்கள் மீது   தக்க  நடவடிக்கை  எடுக்கப் படும் என்று போலீசார் எச்சரித்தனர்.


இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். அதன் பிறகு அதிகாரிகள் நிலத்தை முழுவதும் அளவீடு செய்து வாகிதா அம்மாளிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரது உறவினர்கள் போலீசார் மற்றும் வருவாய் துறை பாதுகாப்புடன் டிராக்டர்களை கொண்டு 3.5 ஏக்கரில் பயிரிடப் பட்டிருந்த சம்பா நெற்பயிர்களை  அழித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...