வியாழன், 8 அக்டோபர், 2015

ஐக்கிய அமீரக மனித உரிமை ஆர்வலருக்கு உயரிய விருது.


ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அகமது மன்சூர், "மனித உரிமைக்கான நோபல் பரிசு' என அழைக்கப்படும் மார்ட்டின் என்னால்ஸ் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.



 இதுகுறித்து இந்த விருதை வழங்கும் மார்ட்டின் என்னால்ஸ் அறக்கட்டளை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

 ஐக்கிய அரபு அமீரகத்தில் மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும் மிகச் சிலரில் அகமது மன்சூரும் ஒருவர். அந்த நாட்டில் மனித உரிமைகள் மேம்பாடு குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களை அவர் அளித்து வருகிறார்.

 மனித உரிமைகளுக்கு அவர் அளித்துள்ள பங்களிப்புக்காக அவருக்கு மார்ட்டின் என்னால்ஸ் விருது வழங்கப்படுகிறது என அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஐக்கிய அமீரகத்தின் சமூகப் பிரச்னைகளைக் குறித்து வெளிப்படையாகப் பேசி வரும் அகமது மன்சூர், அந்த நாட்டில் சர்ச்சைக்குரிய காரணங்களுக்காக சிறையிலடைக்கப்பட்ட இரு இணையதளக் கட்டுரையாளர்களை விடுவிப்பதற்காகக் கடுமையாகப் போராடினார்.

 அதனைத் தொடர்ந்து தேசத்துக்கு எதிரான கருத்துகளைப் பரப்பியதாகக் கூறி, கடந்த 2011-ஆம் ஆண்டு அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

 சர்வதேசக் கண்டனங்களைத் தொடர்ந்து அவருக்கு அதே ஆண்டு பொது மன்னிப்பு வழங்கப்பட்டாலும், அவர் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாதவாறு அவரது கடவுச் சீட்டை (பாஸ்போர்ட்) ஐக்கிய அமீரக அரசு பறிமுதல் செய்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...