சனி, 10 அக்டோபர், 2015

சிங்கப்பூரில் நடுவருக்கு லஞ்சம் தந்து கால்பந்தாட்ட சூதாட்டம்: இந்திய வம்சாவளி நபருக்கு 30 மாத சிறை.


சிங்கப்பூரில் இரு பிரபல அணிகளுக்குள் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியில்  நடுவருக்கு லஞ்சம் கொடுத்து, ஆட்டத்தின் போக்கை திசை திருப்பி,  சூதாட்டத்தில்  ஈடுபட்ட  இந்திய  வம்சாவளி  நபருக்கு 30 மாத சிறை  நபருக்கு 30 மாத சிறை  தண்டனை  விதிக்கப்பட்டுள்ளது.


கடந்த 22-5-2012 அன்று சிங்கப்பூர் லயன்XII  அணியினருக்கும் மலேசியா நாட்டின்  சூப்பர்  லீக்  அணியான சரவக்  அணியினருக்கு  இடையில் பரபரப்பான கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை வைத்து சூதாட்ட பந்தயம் நடத்த இந்திய வம்சாவளி நபரான செல்வராஜன் லெட்சுமணன் (52)  என்பவர்  திட்டமிட்டார்.

எதிர் அணியான மலேசியா நாட்டின் கால்பந்தாட்ட அணியின் பிரதான வீரரான இந்திய வம்சாவளியை சேர்ந்த தனசேகர் சின்னையா(40) மற்றும் ஆட்டத்தின் நடுவராக இருந்த மலேசியாவை சேர்ந்த ஷோக்ரி நார் ஆகியோருக்கு லஞ்சமாக பணம் தந்து அன்றைய ஆட்டத்தின் போக்கை அவர்   திசைதிருப்பினார்.

இதையடுத்து, அந்தப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர்  லயன்XII அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்தப் போட்டியை வைத்து சூதாட்டம் நடத்திய செல்வராஜன் லெட்சுமணன், 20 ஆயிரத்து 625 டாலர்களை சம்பாதித்தார். இவ்விவகாரம், வெளிச்சத்துக்கு வந்தபோது மலேசியாவை  சேர்ந்த  நடுவர்  ஷோக்ரி  தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து, மலேசியா நாட்டின் கால்பந்தாட்ட அணியின் பிரதான வீரரான இந்திய வம்சாவளியை சேர்ந்த தனசேகர் சின்னையா மற்றும் செல்வராஜன் லெட்சுமணன் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது  சிங்கப்பூர்  கோர்ட்டில்  வழக்கு  தொடர்ந்தனர்.

இதில்  தனசேகருக்கு  இரண்டாண்டு  சிறை  தண்டனை விதிக்கப்பட்டு அவர் அதை அனுபவித்துவரும் நிலையில் நேற்று  இவ்வழக்கின் மற்றொரு குற்றவாளியான செல்வராஜன் லெட்சுமணனுக்கு 30 மாத சிறை தண்டனை விதித்து  நீதிபதி  தீர்ப்பளித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...