ஞாயிறு, 4 அக்டோபர், 2015

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் இருதய ரத்தக் குழாய் அடைப்பை நீக்க நவீன சிகிச்சை அறிமுகம்.


தஞ்சாவூர்  மீனாட்சி  மருத்துவமனையில் இருதய ரத்தக் குழாய் அடைப்பை நீக்குவதற்கு  வைரம்  பதிக்கும் கருவி என்ற புதிய தொழில்நுட்பம்   அறிமுகம்   செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையின் இருதய நிபுணர் பி. கேசவமூர்த்தி தெரிவித்திருப்பது:


மாரடைப்பு நோயாளிகளுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை செய்யப்படுகிறது.  வயது  முதிர்ந்தவர்களுக்கும் முன்பு பைபாஸ் அறுவை  சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும் ரத்தக் குழாய்களில்  அடைப்பு  அல்லது  மறு  அடைப்பு ஏற்படும்போது, அதில் அதிக அளவு  சுண்ணாம்பு படிவதால், அந்த அடைப்புகளை பலூன் மூலம் அகற்றுவது   எளிதானதல்ல.

மேலும், இரண்டாம் முறை பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது சிக்கலானதும், அதிக இடர்பாடும் உடையது ஆகும். எனவே, நோயாளிகளுக்குச்  சுண்ணாம்பு அடைப்பை நீக்குவதற்கு ரொட்டாபிளேட்டர் எனப்படும் வைரக் கற்கள் பதித்த குடையும் கருவி உள்ளது.

இந்தக் கருவி நிமிடத்துக்கு 1,75,000 முறை சுற்றும். இந்த வேகத்தில் இருதய ரத்த நாளத்துக்குள் இது செல்லும்போது இயல்பான திசுக்களை வெட்டாமல் படிந்த  சுண்ணாம்பை  மட்டும்  உரைத்து  எடுத்து விடும்.

 2005ஆம் ஆண்டில் தஞ்சையை சேர்ந்த ஜமால் முகமது  பைபாஸ் செய்து கொண்டார். இவருக்கு மீண்டும் அடைப்பு ஏற்பட்டதால்  இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி   ரத்தக் குழாய் அடைப்பு நீக்கப்பட்டு, ஸ்டென்ட்   பொருத்தப்பட்டுள்ளது    என்றார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...