வியாழன், 8 அக்டோபர், 2015

2016 க்கான‌ உலகளவில் செல்வாக்குள்ள இஸ்லாமியர்களில் 500 நபர்கள்.


உலகளவில் செல்வாக்குள்ள இஸ்லாமியர்களில் 2016க்கான‌ 500 நபர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதுஇதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த  இஸ்லாமிய மார்க்க அறிஞர் கீழக்கரை தைக்கா ஷுஐப் இடம் பெற்றுளளார்.


கடந்தஆண்டுகளில்  மறைந்த இந்தியகுடியரசு தலைவர் அப்துல் கலாம், மறைந்த தமிழக தொழிலதிபர் கீழக்கரை பி எஸ் அப்துர் ரஹ்மான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட இம்மூவரும் தமிழகத்தை சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்  என்பது  குறிப்பிடதக்கது.

2016க்கான இப்பட்டியலில் முதல் 50 வரிசையில் ஜோர்தான் அரசர் அப்துல்லா இப்ன் அல் ஹுசைன், சவூதி அரேபியா அரசர் சல்மான்அபுதாபியின் இளவரசரும், ராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான்அமீரக பிரதமர் சேக் முஹம்மது உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.


 உலகில்  செல்வாக்குள்ள  500  முஸ்லிம்கள்  என்ற   தரப்படுத்தலில்     கல்வி,  மதம்,  அரசியல்,  நிர்வாகம்,  கலை  உள்ளிட்ட  பல்வேறு  துறைளை  அடிப்படையாக  கொண்டு  இத் தரப்படுத்தல் இடம் பெற்றுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 3 முஸ்லிம்கள் இடம் பிடித்துள்ளனர். றிஸ்வி முப்தி, ஜெஸீமா இஸ்மாயில், மர்சூப் சலீம். பல்வேறு துறைகளில் இலங்கை முஸ்லிம்களுக்கு  இவர்கள் ஆற்றிய பங்களிப்பின் அடிப்படையில் உலக செல்வாக்குள்ள 500 பேர்களில் இவர்கள் இடம் பிடித்துள்ளமை   குறிப்பிடத்தக்கது.

ஜோர்தான் நாட்டின் Royal Islamic Strategic Studies Center இந்தப் பதிப்பை வெளியிட்டுள்ளது. இதில் துறைவாரியாக தேர்வு உலகில் முக்கிய தலைவர்கள்,  தொழிலதிபர்கள்   உள்ளிட்ட   பலர்  தேர்வு  செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...