சனி, 10 அக்டோபர், 2015

முத்துப்பேட்டை செக்கடிக்குளத்தில் ஆக்ரமிப்பு அகற்ற இறுதிக்கெடு.


சென்னை உயர்நீதி மன்றம் வழிகாட்டுதலின்படி பட்டுக்கோட்டை சாலையில்  உள்ள செக்கடிக் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற  வேண்டும்  என்று  சமூக  ஆர்வலர் 


முகம்மது  மாலிக்,  தாசில்தார், ஆர். டி. ஓ, டி. ஆர். ஓ.     ஆகியோருக்கு  மனு  அனுப்பியிருந்தார்

நடவடிக்கை  எடுக்காததால்  திருவாரூர் கலெக்டருக்கு, உயர்நீதிமன்றம்  உத்தரவுபடியும், தமிழக அரசு நியமனம் செய்த தனி ஆணைப்படியும் பணி செய்யாததால் சம்மந்தப்பட்டவர்கள் மீது உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர அனுமதி கேட்டு கடிதம் அனுப்பினார்.

இதனால் வருவாய் துறை அதிகாரிகள் செக்கடிக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு 40 ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவர்களின் பட்டியலை பேரூராட்சியில் ஒப்படைத்தனர்.

அதன்படி, பேரூராட்சி நிர்வாகம் செக்கடிக்குளத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குடியிருப்பு வாசிகள் தாங்களே அகற்றிக்கொள்ள 10 நாள் கெடு விடுத்து முதல் நோட்டீஸ் வழங்கப்பட்டது

ஆனாலும் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள முன்வரவில்லை. இதேபோல் 3 முறை நோட்டீஸ் அனுப்பியும் ஆக்கிரமிப்பாளர்கள் கண்டுகொள்ளவில்லை

இதனால் கடந்த 15 தினங்களுக்கு முன் சமூக ஆர்வலர் முகம்மது மாலிக், ஐகோர்ட் உத்தரவுப்படி, தாங்களும் தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளும் செக்கடிக்குளம் ஆக்கிரமிப்பை எடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை.  இதற்குண்டான பணிகளையும் செய்யவில்லை. எனவே நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாக திருவாரூர்  கலெக்டருக்கு  கடிதம்  அனுப்பினார்

அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி நேற்று முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் செக்கடிக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒரு வாரம்  கெடு  வழங்கி  இறுதி  நோட்டீஸ்  அனுப்பியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...