மனித நேய மக்கள் கட்சியின்
பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தமிமுன் அன்சாரி நீக்கப்பட்டுள்ளார். சென்னை தாம்பரத்தில் கட்சித்
தலைவர் ரீபாயீ தலைமையில் நடந்த
பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஆருண் ரஷீத்தும்
நீக்கப்பட்டுள்ளார். அதேசமயம் இவர்கள் இருவரும் மனித
நேய மக்கள் கட்சியில் உறுப்பினர்களாக நீடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர்
கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா
நிருபர்களிடம் கூறுகையில், “வரும் சட்டமன்றத் தேர்தலில்
மக்கள் நல கூட்டியக்க கட்சிகளுடன்
கூட்டணி கிடையாது. பா.ஜ.க.
அல்லாத வெற்றி வாய்ப்புள்ள கட்சியுடன்
கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம்”
என்றார்.
இதற்கிடையே,
கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட தமிமுன்
அன்சாரி, தன் மீதான நடவடிக்கை
குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை
நடத்தி வருகிறார்.
தாம்பரத்தில்
இன்று மனித நேய மக்கள்
கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஆனால்,
மூத்த நிர்வாகிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு
காரணமாக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன்
அன்சாரி போட்டி பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், கடைசி நேரத்தில்
கூட்டத்தை ரத்து செய்ததால், சுமுக
உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால்,
சென்னை தாம்பரத்தில் கட்சித் தலைவர் ரீபாயீ
தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில்,
தமிமுன் அன்சாரியை பொறுப்பில் இருந்து நீக்குவதற்கு முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து
தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய தமிமுன்
அன்சாரி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தாம்பரத்தில்
பேராசிரியர் ஜவாஹிருல்லா கூட்டியது உண்மையான பொதுக்குழு கூட்டம் அல்ல. எங்களை
நீக்கியது சட்டவிரோதம். நாங்கள்தான் சட்டப்பூர்வ மனிதநேய மக்கள் கட்சி.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எங்கள் ஆதரவாளர்களுடன் கலந்து
பேசி விரைவில் முடிவை அறிவிப்போம்.
ஜவாஹிருல்லா
கட்சியில் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். நாங்கள் அல்லும் பகலும்
கடுமையாக உழைத்தன் விளைவாக அவர் இப்போது
சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
இவ்வாறு
அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக