புதன், 7 அக்டோபர், 2015

மொபைல் போனின் (ஜி.பி.எஸ்) தவறான வழிகாட்டுதலால் பலியான பெண் தொழிலதிபர்.

மொபைல் போனின் தவறான வழிகாட்டுதலால் பலியான பெண் தொழிலதிபர்.

பிரேசிலின், ரியோடி  ஜெனீரோ  நகரில், பெண் தொழிலதிபரான ரெஜினா முர்முரா (70) தனது கணவர் பிரான்சிஸ்கோ (69) இருவரும்
இந்நகரின்  நித்தேரோய்  கடற்கரைக்கு செல்லும் முயற்சியில்வேஸ் என்கிற உள்ளூர் வழிகாட்டும் செயலியின் (ஜி.பி.எஸ்.)  உதவியை  நாடினார்.

அந்த செயலி காண்பித்த வழியில் பயணித்தபோது, எதிர்பாராத விதமாக கருமுஜோ ஃபவிலா  என்கிற  பகுதிக்குள்  இவர்கள்  நுழைந்தனர். அந்தப்பகுதி, போதைமருந்து   கடத்தல்   கும்பலால்   ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது.

இதையறியாமல் இங்கு நுழைந்த ரெஜினாவை, இந்தக் கடத்தல் கும்பல், சரமாரியாக  துப்பாக்கியால் சுடத் தொடங்கியது.  இதில் பெரிதும் பாதிக்கப்பட்ட ரெஜினாவை, அருகாமையிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள்  அவர்  உயிரிழந்து போனார்.

ரோட்ரிகோடா சில்வா ரோட்ரிகஸ் என்கிற போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டு வருபவனது அடியாட்களால் ரெஜினா சுடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

சுமார் ஐம்பது ஆண்டுகளாக ரெஜினாவுடன் வாழ்ந்து வரும் பிரான்சிஸ்கோ,  ரெஜினாவின்   இழப்பு   ஈடுகட்ட முடியாதது  என்று  தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...