தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே நேற்று காலை நடந்த கார் விபத்தில் பலரும் காயம் அடைந்தனர். இதில் காரில் பயணம் செய்த த.மு.மு.க மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஹைதர் அலி சிறு காயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
அதே போல் அவரது டிரைவர் சீமானும் எந்த காயமும் இல்லாமல் உயிர் தப்பினார். இந்த நிலையில் ஹைதர் அலி நேற்று முத்துப்பேட்டை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவிட்டு நகர த.மு.மு.க தலைவர் சம்சுதீன் இல்லத்தில் ஓய்வு எடுத்தார்.
அவரை தமீமும் அன்சாரி தலைமையிலான மனித நேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவர் அஸ்லாம் பாட்சா, இந்தியன் ரெட் கிராஸ் சேர்மேன் இத்ரீஸ் உட்பட கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து நலம் விசாரித்தனர்.
மனித நேய மக்கள் கட்சியில் பிளவு ஏற்பட்டதால் தமீமுன் அன்சாரி தலைமையிலான கட்சித்தான் உண்மையான இயக்கம் என்று பிரச்சனை ஏற்பட்டது. இதனால் இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
இந்த நிலையில் ஜவாஹிருல்லா அணியில் இருக்கும் ஹைதர் அலி விபத்தில் சிக்கியதால் அவரை சந்திக்க தமீம் அன்சாரி மாநில அமைப்பு செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷாவை அனுப்பி நலம் விசாரிக்க வைத்தார்.
அப்பொழுது அவரின் செல்போனிலிருந்து ஹைதர் அலியிடம் தமீமுன் அன்சாரி உடல் நலம் விசாரித்தார். இச்சம்பவம் கட்சியினரிடையே நெகிழ்ச்சி காணப்பட்டது.
தகவல்....நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக