முத்துப் பேட்டையில் பறவைகளை வேட்டையாடிய 6 பேருக்கு அபராதம் விதிக்கப் பட்டது.
திருவாரூர் மாவட்டம், முத்துப் பேட்டை பகுதியில் வட கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதையடுத்து ஏராளமான பறவைகள் குவிந்துள்ளன.
இப் பறவைகளை வேட்டையாடுவதை தடுக்க திருச்சி மண்டல வனப் பாதுகாவலர் கருணை பிரியா மற்றும் திருவாரூர் மாவட்ட வன அலுவலர் பார்த்திபன் உத்தரவுப்படி முத்துப் பேட்டை வனசரகர் அயூப்கான் தலைமையில் வன பாதுகாவலர்கள் தனிப்படை அமைத்து கடந்த சில நாட்களாக அப்பகுதியில் இரவு, பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.
இந் நிலையில் நேற்று அப் பகுதியில் பறவை வேட்டையில் ஈடு படடிருந்த குமார், கிட்டப்பா, தெட்சிணா மூர்த்தி, காத்த முத்து, மூர்த்தி, ராமலிங்கம் ஆகிய 6 பேரையும் மடக்கி பிடித்தனர்.
அவர்களில் குமாருக்கு ரூ.6 ஆயிரமும் மற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப் பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக