கனடாவில் வர்த்தகத் துறையில் பிரகாசித்து வரும் இரண்டு தமிழ் பேசும் பெண்மணிகள், உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமானின் சகோதரி திருமதி ரெஹேனாவுடன் கூட்டுச் சேர்ந்து மூன்று பெண்மணிகளும் தமிழ் திரைப் படம் ஒன்றை தயாரித்து வருகின்றனர்.
இந்த திரைப்படத்தின் பெயர் ”ஏன்டா தலையில எண்ண வைக்கல்ல??”
மேற்படி ”ஏன்டா தலையில எண்ண வைக்கல்ல??” திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் 100 வீதம் சென்னை மாநகரிலும் அதனை சுற்றியுள்ள இடங்களிலுமே நடைபெற்றுள்ளன. அதிர்ஸ்டவசமாக தற்போதைய பெரும் மழை வீழ்ச்சி தமிழ்நாட்டைப் பாதித்திருந்தாலும் 90 சத வீதமான படப்பிடிப்புக்கள் ஏற்கெனவே நடைபெற்று முடிந்து விட்டன.
இந்த திரைப்படத் தயாரி்ப்பில் ஈடுபட்டுள்ள இரண்டு கனடியப் பெண்மணிகளில் ஒருவர் பிரபல வர்த்தகப் பிரமுகர் திரு யோகி தம்பிப் பிள்ளை அவர்களின் பாரியார் ஆவார். அடுத்தவர் திருமதி வாசுதி ஆசிர்வாதம் அவர்கள். டாக்டர் இந்திரன் ஆசிர்வாதம் அவர்களின் பாரியார் ஆவார். இவரும் ஒரு வைத்திய கலாநிதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் சென்னையில் நடைபெற்றன என்று குறிப்பிட்டிருந்தோம்.இதில் விசேடமாக குறிப்பிடவேண்டியது என்னவென்றால் திரைப்படத்தில் ஒரு திரைப்பட இசையமைப்பாளாராக தோன்றும் திரு யோகி தம்பிப்பிள்ளை அவர்கள் தோன்றும் காட்சி ஒன்று உலகில் மிகத் தரம் வாய்ந்த ஒளிப்பதிவுக் கூடம் என்று கருதப்படும் ஏ. ஆர் ரகுமான் அவர்களின் சென்னை இசைக் கூடத்தில் படமாக்கப்பட்டது என்பது தான்.
கனடாவில் உள்ள சிறந்த பாடகர்களில் ஒருவரும் சென்னை விஜய் தொலைக்காட்சியின் ”சுப்பர் சிங்கர்” நிகழ்ச்சியின் உச்சம் வரைக்கும் சென்று வந்தவருமான இளம் பாடகர் செல்வன் சாயிசன் அவர்களுக்கு இந்த மூன்று பெண் தயாரிப்பாளர்களும் மேற்படி ”ஏன்டா தலையில எண்ண வைக்கல்ல??” திரைப்படத்தில் பாடல் ஒன்றைப் பாடுவதற்கு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளார்கள் என்பதே.
தகவல்....கனடா உதயன் செய்திப் பிரிவு.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக