சனி, 5 டிசம்பர், 2015

பல லட்சம் கொடுத்து பேராசையால் ஏமாந்த மக்களே....

10 லட்சம்  கூட  மதிப்பு பெறாத வீட்டை 50 லட்சம், 70 லட்சம் என்று கொடுத்து நாளைக்கு 1 கோடி  ஆகும்,  5 கோடி  ஆகும்  என்று பேராசை கொண்டு  ஏமாந்த மக்களே....


உங்கள் நண்பர்களுக்கு, சொந்தங்களுக்கு  சொல்லுங்கள். சென்னையின் தாழ்வான பகுதியாகிய வேளச்சேரி,கீழ்க்கட்டளை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம்,கோவிலம்பாக்கம்,பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் மனையோ,  வீடோ,  அடுக்குமாடி  குடியிருப்போ  வாங்காதீர்கள் என்று. 

இவை  அனைத்தும்  ஏரிகளாக இருந்த பகுதிகள்.  1000 வசதிகள் உள்ளது என்று  சொன்னாலும்  மழை  பெய்வதை  சொல்பவர்   தடுக்க  முடியாது.   மழைநீர்   அதன்   இருப்பிடம்  நோக்கி  தான்  சென்றது. நாம் தான் அதன் இருபிடத்தை  அழித்து  நாம்  வாழும்  இடமாக  மாற்றி  கொண்டோம்.

 நீங்கள் ஏமாந்தது உங்களோடு முடியட்டும். நான் மட்டும் ஏமாறலாமா வா உன்னையும் ஏமாற வைக்கிறேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு  பிறரை  படு  குழியில்  தள்ளாதீர்கள் .


Hamsabai Santhana Krishnan


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...