கடந்த 10 ஆண்டுகளாக நாம் பங்கேற்ற கல்வி நிகழ்ச்சிகள் அனைத்திலும் தொடர்ச்சியாக ஒரு கருத்தை முன் வைத்து வந்துள்ளோம்.....
இன்னும் சில ஆண்டுகளில் உலகின் பெரும்பாலான நாடுகள் தங்கள் மின் தேவைக்கு சூரிய ஒளி ஆற்றலுக்கு (Solar) மாறிவிடும்.
பொறியியல் படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் B.E.எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் (EEE) பயின்று உள்நாட்டில் அல்லது வெளிநாடுகளில் மேற்படிப்பாக M.E. Renewable Energy (Solar) பயின்று அதில் ஆய்வு நிலை வரை செல்ல வேண்டும்.
இதை திரும்ப திரும்ப சமுதாயத்தின் சிந்தனைக்கு கொண்டு சென்றுள்ளோம்.
இதை மெய்ப்பிக்கும் விதமாக இன்றைய கலீஜ் டைம்ஸ் நாளிதழில்....2030 க்குள் துபாய் மாநிலம் முழுவதும் சூரிய ஒளி ஆற்றலுக்கு மாறிவிடும் என்று செய்தி வந்துள்ளது.
தமிழக முஸ்லிம் சகோதரர்கள் சிலர் தற்போது ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்த் போன்ற நாடுகளில் சூரியஒளி ஆற்றலில் மேற்படிப்பு பயின்று வருகின்றனர். இந்த ஆண்டு இன்னும் பலர் செல்ல இருக்கின்றனர்.
அடுத்த 20 ஆண்டுகளில் கோலோச்சப் போகும் துறையை கணித்து அதில் கோலோச்சுகின்ற இலக்குடைய சமுகமே உலகை ஆளுமை செய்யும்.
தொலைநோக்கு திட்டத்துடன் இளைய தலைமுறையினருக்கு மிகச்சரியாக வழிகாட்டி உருவாக்கினால் இன்ஷா அல்லாஹ்......
சமூகம் மறுமலர்ச்சி அடையும்.
CMN. சலீம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக