வியாழன், 3 டிசம்பர், 2015

முத்துப்பேட்டை மக்களின் பயன்பாட்டிற்கு உதவும் குளங்களின் அவல நிலை.


இப்படி குப்பை மேடாக காட்சியளிக்கும்                      இடம்  நமது  முத்துப்பேட்டை  ஊருக்கு நடுவே இருக்கும் குண்டான் குளம்தான்   இது.


குளத்தை சுற்றி உள்ள அனைத்து குடியிருப்பு வாசிகளின் குப்பை கொட்டும் இடமாக  மாறிபோய் உள்ளது  இந்த  அழகிய குளம்.

குளத்தை சுற்றி வசிப்பவர்கள்  99சதவீதம் பேர் முஸ்லிம்கள் என்பது இன்னும் கூடுதலாக  கவலைபட வேண்டிய அம்சம்.  நீர் ஆதாரமாக இருக்கும் குளத்தில்  குப்பையை  கொட்டுகிறோமே  என்ற  உனர்வு  மக்களுக்கு இல்லை.

மக்கள்தான் அறியாமல் குப்பையை கொட்டுகிறார்கள் அதை தடுத்து குளத்தின் அருகில் ஒரு குப்பை தொட்டி வைத்து அதில் குப்பையை கொட்ட சொல்வோம் என்ற அறிவு ஏ கிரேடு வரி வசூலிக்கும் பேரூராட்சிக்கும் இல்லை.

குளத்தை  சுற்றி ஆக்கிரமிப்பு ஒருபுறம் என்றால் அதை குப்பை மேடாக மாற்றி தனக்குதானே கேடுகளை தேடிகொண்டு வாழும் சுயநல மக்கள் மறுபுறம்.

பட்டரைகுளம் ஆக்கிரமிப்பை அகற்றுகிறோம் என்று பள்ளிவாசலை இடித்தார்களே.... உடனே குளத்தை சுற்றி காம்பவுண்ட் எடுத்து குளத்தை தூர்வாரி  சரி  செய்தார்களா? இல்லையே!!

இப்படி நடந்து கொண்டால் ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு எப்படி கிடைக்கும்?

முத்துப்பேட்டையில் மிதமான மழை விட்டு விட்டு பெய்வதால் தப்பித்தோம் பிழைத்தோம் என மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். முத்துப்பேட்டையில் காணாமல் போன குளங்களும் காணாமல் போன மழைநீர் வடிகால்களும் அதிகம்.

நூரான்குண்டு என்ற குளத்தையும், மூனுமூலை குளத்தையும் முழுமையாக காணவில்லை. மற்ற குளங்களில் பாதி கால்வாசி என காணாமல் போய்விட்டது.

பட்டரை குளத்திற்கு நீர்வரும் பாதை பாதிபோய்விட்டு பாதி உள்ளது. குண்டான் குளம், கல்கேனி குளம், செக்கடி குளம் போன்றவற்றிர்க்கு நீர் வரும் அல்லது  வெளியேரும்  பாதை  காணாமலே போய்விட்டது.

இதே நிலை நீடித்தால் இன்று சென்னையில் பெய்யும் மழை நாளை முத்துப்பேட்டையில்  பெய்தால்  நிலமை  என்ன ஆகும்? அரசாங்கம் உடனடியாக களத்தில் இறங்கி வரும்முன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவ்ஹித்ஜமாத் போன்ற இயக்கங்கள் இதை செய்ய அரசை வலியுறுத்த வேண்டும்.

முத்துப்பேட்டை அன்சாரி.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...