அரச நிறுவனங்களை மிஞ்சும் விதத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சென்னை மக்களுக்காக நிவாரண பணிகள் ஆற்றி வருகின்றனர்.
இஸ்லாமிய அமைப்புகளையும் அதன் தொண்டர்களையும் பொறுத்தவரை . யாருடைய பாராட்டையும் எதிர்பார்த்து அறபணிகளை செய்வதில்லை. தங்களை படைத்த இறைவனுக்கு அஞ்சியும் அவனிடம் மட்டுமே கூலியை எதிர்பார்த்துமே முஸ்லிம் மீட்பணிகள் உட்பட அனைத்து நல்லறங்களையும் செய்கின்றனர்.
இன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள செய்தி ஒன்று ஜெயா பிளஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்யபட்டது.
அதில் தன்னலம் மறந்து மீட்பு பணியில் இறங்கியுள்ள இஸ்லாமிய அமைப்புகளையும் கட்சிகளையும் பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.
மாடியிலிருந்து இறங்குவதற்க்கு உதவியாக தங்களது தோல்களும், கைகளையும் ஏணிகளாக ஆக்கிகொண்ட தமுமுக தொண்டர்கள்.
சென்னை கிரசெண்ட் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் இளைஞர் யூனுஸ், ஊரப்பாக்கம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது மோகன் மற்றும் அவருடய நிறைமாத கர்ப்பிணி மனைவியான சித்ரா ஆகியோர் வெள்ளத்தில் சிக்கியிருந்தனர். இவர்களை இளைஞர் யூனுஸ் காப்பாற்றி பத்திரமாக பாதுகாப்பான இடத்தில் சேர்த்தார்.
அப்போது பிரசவ வலி ஏற்ப்பட்டு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் தன் குடும்பத்தை சரியான நேரத்தில் தன் நிலையை பொருட்படுத்தாமல் மீட்ட யூனுசுக்கு நன்றி சொல்லும் விதமாக குடும்பத்தினர் அக்குழந்தைக்கு யூனுஸ் என்று பெயர் சூட்டியுள்ளனர்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக