முத்துப் பேட்டை அருகே மாயமான மாணவி ஈரோட்டில் மீட்கப் பட்டார். திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 10 வகுப்பு மாணவி கடந்த 26ம் தேதி மாயமானார்.
அவரை தோழிகள் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து நேற்று முன் தினம் முத்துப் பேட்டை போலீசில் அவரது தந்தை மகளை காணவில்லை என்று புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ராஜ் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இதில் மாணவி படிக்கும் பள்ளியில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த ஈரோட்டை சேர்ந்த கொத்தனார் லட்சுமணன் என்பவருடன் மாணவி அடிக்கடி பேசியது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை தொடர்பு கொண்டு விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் மாணவியை ஒப்படைக்கா விட்டால் உன் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொத்தனாரை எச்சரித்தனர்.
இந் நிலையில் நேற்று முன் தினம் இரவு மாணவி ஈரோட்டுக்கு வந்திருப்பதாக லட்சுமணன் குடும்பத்தினர் முத்துப் பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்று மாணவியை மீட்டு நேற்று அதிகாலை முத்துப் பேட்டைக்கு அழைத்து வந்தனர்.
போலீசார் மாணவிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக