வெள்ளி, 4 டிசம்பர், 2015

முத்துப்பேட்டையில் கனமழையால் மீன் மார்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது.


இப்பகுதியில் கடல் சீற்றம் காணப்பட்டாலும் நேற்று பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று இருந்தனர். இந் நிலையில் எந்த நேரமும் கடுமையான கூட்டமாக காணப்படும் ஆசாத்நகர் மீன்மார்கெட் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

இதனால் மீன்கள் ஏலம் எடுக்க பொதுமக்கள் யாரும் அதிகஅளவில் வராததால் மீன்கள் விலை மலிவாக இருந்தது. அதேபோல் மீன் விற்பனை செய்யும் பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது.

முத்துப்பேட்டை ஆசாத்நகர் மீன் மார்க்கெட்டில் மீன் ஏலம் எடுக்க யாரும் அதிகஅளவில் வராததால் ஏலம் விடுபவர் நீண்ட நேரம் கூவிக்கொண்டே இருந்தார்.


படம் & செய்தி ...நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...