சனி, 5 டிசம்பர், 2015

சென்னை வெள்ள நிவாரணத்துக்கு சிங்கப்பூர் அரசு ரூ.50 லட்சம் ரூபாய் நிதியுதவி.

சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு தொடர்பான துயர்துடைப்பு நிவாரணப் பணிகளுக்காக 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. 


தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் துயர் துடைப்பு நிவாரணப் பணிகளுக்கு உதவிடுமாறு  சர்வதேச  சமுதாயத்துக்கு தெற்காசிய செஞ்சிலுவைச் சங்கம்  வேண்டுகோள்  விடுத்திருந்தது. 

அதையேற்று,  சிங்கப்பூர் அரசின் சார்பில் 75 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்புக்கு சுமார் ஐம்பது லட்சம் ரூபாய்)  நிதியுதவி அளிக்கப்பட்டதாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் இன்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு  அவர் கடிதம்  அனுப்பியுள்ளார். 

சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் உண்டான நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் மற்றும் ஏராளமான மக்கள்படும் இன்னல்களை அறிந்து வேதனை அடைந்துள்ளேன். இதர சிங்கப்பூர் மக்களைப் போலவே விரைவில் வெள்ளம் வடிந்து அங்கு இயல்புநிலை  திரும்பும்  என நான்  நம்புகிறேன். 

தமிழ்நாட்டு மக்களுடன் சிங்கப்பூர் மக்களின் உணர்வுகளும் ஒன்றிணைந்துள்ளது என்பதை உணர்த்தும் விதமாக சிங்கப்பூர் அரசு அளித்துள்ள  இந்த  நிதியுதவியானது, உங்களது தலைமையிலான தமிழ்நாடு அரசின் துயர்துடைப்பு பணிகளில் உதவிகரமாக இருக்கும் என நம்புகிறேன்  என  அந்த  கடிதத்தில்  அவர்  குறிப்பிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...