ஐதராபாத்தின் மாதாபூர் பகுதியில் அரசு மேல் நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படிப்பவர் ரோஜா (14, பெயர் மாற்றப் பட்டுள்ளது). கடந்த சனிக்கிழமையன்று வகுப்பில் இருந்த ரோஜாவுக்கு, வயிறுவலி ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆசிரியையிடம் கூறிவிட்டு, கழிவறைக்கு சென்றார். சிறிது நேரத்தில் அங்கிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.
இதை கேட்ட ஆசிரியை மற்றும் மாணவிகள் விரைந்து சென்று பார்த்தனர். அங்கு அந்த மாணவிக்கு குழந்தை பிறந்திருப்பதும், ரத்தப் போக்கினால் மாணவி தவித்து கொண்டிருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து உடனடியாக தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் மூலம், மருத்துவ ஆம்புலன்சுக்கும், மல்காஜ்கிரி பள்ளி கல்வித்துறை துணை அதிகாரி உஷா ராணிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவ குழுவினர் உடனடியாக மாணவிக்கும், அவருக்கு பிறந்த குழந்தைக்கும் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
மாணவி மைனர் என்பதால், பள்ளி கல்வித் துறை அதிகாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மாணவியின் கர்ப்பத்தை கவனிக்க தவறிய வகுப்பாசிரியர்களுக்கு மெமோவும், பள்ளி தலைமை ஆசிரியர் பசவலிங்கத்தை சஸ் பெண்ட் செய்தும் அவர் உத்தர விட்டார்.
இது குறித்து ரோஜாவின் தோழிகளிடம் கேட்ட போது, ‘அவரது வயிறு கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பெரிதாக இருப்பதை போன்று இல்லாமல் இருந்தது. அதனால் யாருக்கும் சந்தேகம் வர வில்லை. மேலும், அவர் எப்போதும் வயிற்றில் பெல்ட் போன்று கட்டியிருந்தார்’ என்றும் கூறியுள்ளனர்.
தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்து வந்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தினர். ரோஜா கர்ப்பமாக இருப்பது, அவரது தாய்க்கு தெரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, ரோஜாவின் தந்தை மாதாப்பூர் போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், ‘எனது மகளுடன் பழகிய தானு என்பவன் தான், அவளது கர்ப்பத்துக்கு காரணம். அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ’’ என்று கூறியிருந்தார்.
இதனடிப் படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தானுவை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
போலீசார் கூறுகையில், ‘‘பாதிக்கப் பட்ட மாணவி குக்கிராமத்தில் வசிப்பவர். மாணவியின் தந்தை கூலி வேலை செய்து வருகிறார். மகள் கர்ப்பமானது தாய்க்கு தெரிந்துள்ள து ’’ என்றனர்.
9ம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளியில் குழந்தை பெற்ற சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக