நாகை மாவட்டத்தில் நேற்று முன் தினம் மதியம் முதல் இரவு வரை இடை விடாமல் மழை பெய்தது. நேற்று காலை முதல் மழை பெய்ய வில்லை. வானம் மேக மூட்டத்துடன் காணப் பட்டது.
நாகை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையளவு விவரம் (மி.மீ.): நாகை 73, மயி லாடுதுறை 26.80, சீர்காழி 42.20, வேதாரண்யம் 139, தரங்கம்பாடி 59, திருப்பூண்டி 40, தலை ஞாயிறு 34, மணல் மேடு 23.60, கொள்ளிடம் 26 ஆகும். மாவட்டத்தில் பெய்த மொத்த மழையளவு 463.60 மி.மீட்டராகும். இது சராசரியாக 51.51 மி.மீட்டராகும்.
திருத்துறைப் பூண்டி பகுதியில் நேற்று முன் தினம் 44 மி.மீட் டர் மழை பதிவானது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் வட கிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் துவங்கி பெய்யும். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்யும் மழையால் பயிர் சேதம், உயிர் சேதம், கால் நடைகள் இறப்பு ஏற்படுவது வழக்கம். கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் திருத்துறைப் பூண்டியில் 340.8 மி.மீட்டர், முத்துப் பேட்டை 175.9 மி.மீ., என 516.7 மி.மீ. மழை பெய்தது.
கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் திருத்துறைப் பூண்டி, முத்துப் பேட்டையில் 673 மி.மீ., மழை பெய்துள்ளது. இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் திருத்துறைப்பூண்டியில் 248.6 மி.மீ., முத்துப் பேட் டை யில் 373.8 மி.மீ., என 422.4 மிமீ மழையும், நவம்பர் மாதத்தில் திருத்துறைப் பூண்டியில் 513.8 மி.மீ., முத்துப் பேட்டையில் 302.2 மி.மீ., மழை பெய்துள்ளது.
நேற்று முன்தினம் மதியம் 12.30 முதல் 3 மணி வரை 44 மி.மீ., மழை பெய்தது. கடந்த 2 மாதத்தில் பெய்த மழையில் நேற்று முன் தினம் பெய்த மழைதான் அதிகம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்த மழையால் நகரில் அனைத்து சாலைகளும் தண்ணீர் ஆறுகள் போல் ஓடியது. பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப் பட்டனர். தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்ததால் வர்த்தகர்கள் மாலை 6 மணிக்கு முன்பே கடைகளை பூட்டி சென்று விட்டனர்.
2 மாதத்தில் பெய்த மழையால் பெரும் பாலான சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப் பட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக