சென்னையில் மழை சற்று ஓய்ந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாக முடங்கியிருந்த ரெயில் போக்குவரத்து சீரடையத் தொடங்கி உள்ளது.
முதலில் சென்னை எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு வரையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. பின்னர் கடற்கரையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இன்றும் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இன்று சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், மழைநீர் வடிந்து நிலைமை சீரடைந்துள்ளதால், இன்று நள்ளிரவுக்குப் பிறகு சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து வழக்கமான ரெயில் சேவை தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்ட்ரல், எழும்பூரில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்கள் மற்றும் இந்த ரெயில் நிலையங்களை கடந்து செல்லும் அனைத்து ரெயில்களும் வழக்கம்போல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக