டிவி யில் மீட்புப் பணிகள் நடைபெறுவதை உணவு, பால், நீர் தரப்படுவதைக் காட்டுகிறார்கள் .. மீட்பு நடவடிக்கை ஊடக வீடியோக்களில் களப்பணியில் முஷ்லிம்கள் இல்லாத வீடியோவே இல்லை. கடைசிக்கு 2 டொப்பியாவது தென்படுகிறது. பொதுத் தொண்டில் ,.வாழ்க முகமதிசம்..,
அவர்களின் பள்ளிக்கு அடைக்கலம் புகுந்த நம் பெண்களிடம், குழந்தைகளிடம், மக்களிடம் அவர்கள் தீட்டுப்பார்க்கவில்லை. பள்ளிவாசலில் குடம் குடமாய் குடி நீர் எடுத்துக் கொள்ளவும் அனுமதித்துள்ளார்கள் .,
துலுகன் புத்தி தொண்டைகுழி வரைக்கும் என்றீர்கள் ,. ஆம் தொண்டையில் நீர் வார்த்தார்கள் ., தொண்டையில் கடந்த சில தினங்களில் இரங்கிய உணவு அவர்கள் கொடுத்தது தான்..,
நம்மை அவர்கள் மாமா, மச்சான் என்று அழைத்தது உதட்டில் அல்ல உள்ளத்தில் இருந்து என்றும் உணர முடிகிறது .,
இனி ஒரு பாபர் மசூதியும் இடிக்கப்படக் கூடாது ,. மழைக்கு ஒதுங்க உதவும் இனி இந்திய மசூதிகள் நம்முடையது. உயிரைக் கொடுத்தேனும் நம் தெருவில் இருக்கும் அவர்களின் மசூதிகளை., நம் புகழிடங்களை நாம் காக்க வேண்டும்.. சர்ச்சுகளுக்கும் இது பொருந்தும்..,
யாருடைய தேச பக்தியை நாம் காலமெல்லாம் சந்தேகிக்க நிர்பந்திக்கப்பட்டோமோ??! யாரை பாகிஷ்தானுக்கு போ என சங்கப்பரிவார் RSS, BJP சொன்னபோது நாம் வேடிக்கை பார்த்தோமோ?? அந்த முஷ்லிம்கள் ., யாரைக் காரில் அடிபட்ட நாய் என்று மோடி சொன்னாரோ?! அந்த முஷ்லிம்கள்.., ஆம் மாட்டுக்கறியின் பெயரால் கொல்லப்பட்ட, வேட்டையாடப்பட்ட அதே முஷ்லிம்கள்.. மீட்புப்பணியில் உயிரைப் பணயம் வைத்து ...
ஆனால் இவர்களது தேச பக்தியைக் கேள்விக்கு உட்படுத்திய தேச பக்தர்களைக் கானோம் களத்தில் .,
....உள்ளதை சொல்கிறேன் ராஜ்குமார்
கண்ணீர் துளிகளை காணிக்கையாக்குகிறேன்..!!!
இன்று பிரசவ வேதனையில் துடித்த பெண் எமனிடம் சென்று திரும்ப வந்ததாகத்தான் நான் நினைக்கிறேன், இது வரை சினிமாவிலும், செய்திகளிளும் சொன்னது போல தாடியுடன், தீவிரவாதிகளின் அடையாளத்துடன், எங்கள் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட. இளைஞர்கள் எங்களுக்கு கடவுளின் பிள்ளைகளாகவே தெரிந்தார்கள்.
எங்களை சினிமாவில் ஏமாற்றிய நடிகர் அர்ஜுன், சரத்குமார், விஜயகாந்த், இதுவரை வெள்ளம்பாதித்த பகுதியில் காணவில்லை, ஆனால் அவர்கள் கெட்டவர்கள் என்று சொன்ன பாய்மார்கள் தான் இரவு பகல் பாராமல் அவர்கள் குடும்பத்தார்கள் பாதித்ததைபோன்று அக்கரையுடன் உதவுகிறார்கள்.
ராணுவம், போலிஸ் செல்ல தயங்கிய பகுதிகளுக்கு கூட பாய்மார்கள் பயப்படாமல் போகிறார்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், அவர்களின் உடமைகளையும் பாதுகாப்பாக மீட்பது, இறந்த சடலத்தை தூக்குவது, உணவுதயாரித்து விணியோகம் செய்வது.
கடவுளே ஆண்கள்மட்டுமா பாய்வீட்டுப் பெண்களும் மீட்புபணியில், வெக்கி தலை குணிந்தேன், இளகியமணம் படைத்த இவர்களையா தீவிரவாதிகள் என்று அவர்கள் சொன்னதை நம்பினேன். இன்று தங்கி இருக்கும் பள்ளிவாசலில் மானசீகமாய் கடவுள் அல்லா விடம் மண்ணிப்பு கேட்கிறேன் என்னை மன்னித்து விடுங்கள் #கடவுளே
சென்னை மழை மக்களுக்கு கற்று தந்த பாடம் மனித நேயம் மட்டும் தான். எந்த ஒரு தொல்லை காட்சிகளிலும் இஸ்லாமியர்களின் பங்களிப்பை காட்டவில்லை. ஆனால் முக நூலில் இந்து சகோதரர்களின் பதிவுகளை பார்க்கும் போது எந்த அளவிற்கு உதவி செய்து இருந்தால் இப்படி பதிவுகள் எழுதி இருப்பார்கள் என்று ஒரு சாமானியனையும் நினைக்க வைக்கிறது இந்த பதிவுகள்.
இருமக்களிடைய யார் அரசியல் செய்கிறார்கள் என்று மக்கள் உணர்ந்து இருப்பார்கள்.
இஸ்மாயில் மரிக்கா..








































கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக