முத்துப்பேட்டை நகர தமுமுக சார்பாக ஆசாத் நகர் கடைதெருவில் பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தீன் முகம்மது தலைமையில் நடைபெற்றது.
பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை ஆசாத் நகர் ஜமாத் தலைவர் ஜின்னா வழங்கி தொடங்கி வைத்தார். இதில் சுமார் 400க்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் பயன் பெற்றனர்.
நிகழ்ச்சியில் மமக மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் முத்துப்பேட்டை பைசல், மமக நகர செயலாளர் ஹாமீம், தமுமுக நகர செயலாளர் சம்சுதீன், நகர பொருளாளர் தாவுதுஷா, நகர துணை செயலாளர் சீமான், முன்னால் மாவட்ட தொண்டரணி செயலாளர் ஆடம்பரம் யூசுப், 6- வது வார்டு செயலாளர் ஜெகபர் சாதிக், 3- வது வார்டு செயலாளர் தாரிக், மாணவரணி செயலாளர் ஜுபைர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
படம் & செய்தி நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக