வெள்ளி, 16 அக்டோபர், 2015

முத்துப்பேட்டை திமிலா தெருவில் பாவா பகுருதீன் வீட்டில் திருட்டு.


முத்துப்பேட்டை  அருகே  உள்ள  திமிலா  தெருவை  சேர்ந்தவர் பாபா பக்ருதீன். ஓட்டல்  நடத்தி  வருகிறார்.

இவர்  ஓட்டலுக்கு  வந்து விட்டார். இவரது மனைவி பின் பக்க கதவை சாத்தி வைத்து விட்டு வெளியில் சென்று  இருந்தார்.


இதனை நோட்டமிட்ட மர்ம  ஆசாமி  வீட்டின் பின் பக்கம் வழியாக வந்து பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த  2½  பவுன் நெக்லஸ், 3¼ பவுன் கைப்பட்டி, ரூ. 3 ஆயிரம் ரொக்கப்பணம்   ஆகியவற்றை  திருடி  சென்று  விட்டான். 

இது குறித்து  முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர்  ராஜ் குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...