மலேசியாவில் புதிதாக இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய தோண்டப்பட்ட இடத்தில் கடந்த 2009ம் வருடம் அடக்கம் செய்யப்பட்ட ஒரு ஜனாஸா கொஞ்சமும் சேதப்படாமல் அன்று வைத்தது போலவே இருந்துள்ளது.
கஃபன்,
சர்பான், தலைக்கு வைக்கப்பட்ட தலையணை
என்று அந்த ஜனாஸாவுடன் இருந்த எதுவும் சேதமாகாமல் இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மர்ஹூம் இஸ்மாயில் அவர்களின் மனைவி ஜமீலா சாஃபியா கூறுகையில்....
2009ம் ஆண்டு புற்றுநோயின் தாக்கத்தால் இஸ்மாயில் ஹாசிம் அவர்கல் 57 வது வயதில் மரணமடைந்தார்கள். என் கணவர் வாழ்ந்த காலத்தில்
ஃபர்லான மற்றும் ஸுன்னத்தான தொழுகையை
நிறைவேற்றுவதில் மிகவும் பேணுதல் உடையவராகவும், மற்ற அமல்களிலும் அதிகம் கவனமுடையராகவும் வாழ்ந்தார்கள்.
அது மட்டும் இல்லாமல் எங்கெல்லாம்
இஸ்லாமிய சொற்பொழிவுகள், மார்க்க பாட வகுப்புகள்
நடந்தாலும் அங்கே சென்று தெளிவான
விளக்கங்களையும் கற்பவராகவும் இருந்தார்கள்.
அக்கம்பக்கத்தில் கிராமத்தில் இருப்பவர்களிடம், சிறியவர், பெரியவர் என்று அனைவரிடமும் அதிகம் மரியாதை செலுத்துபவராகவும், எங்களுக்கே
தெரியாமல் ரகசியமாக அதிகம் அதிகம் சதக்கா
செய்யும் வழக்கம் உடையவராகவும் வாழ்ந்தார்கள்.
இன்று தன் கணவரின் உடல் நறுமணத்துடனும்
கொஞ்சமும் சிதைவடையாமல் இருப்பது கண்டு மிகவும் அதிர்ச்சியும்
ஆச்சர்யமும் அடைந்தேன் என்றார்.
நல்லோர்களின் உடலை மண் தீண்டாது என்ற வார்த்தைகளை அல்லாஹ் அத்தாட்சியாக
நிகழ்த்திக் காட்டியுள்ளான். சிந்தித்து பார்ப்பவற்கும், அறிவுடையோர்க்கும் இதில் நேர் வழி கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இடம்: மஸ்ஜித் ஜாமேக் துவான்
ஹுஸைன், புக்கிட் துக்காங் ஜோசொ,





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக