செவ்வாய், 13 அக்டோபர், 2015

வகுப்பில் சிறுநீர் கழித்த சிறுமியை சூடான இரும்பு தகடு மீது அமர வைத்த ஆசிரியை.

ஆந்திராவில் வகுப்பறையில் சிறுநீர் கழித்ததற்காக 4 வயது சிறுமியை சூடான  இரும்புத் தகடு மீது அமர வைத்த ஆசிரியையின்  செயல் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.



ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு நகரில் ஹோப்  என்னும்  தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் படித்து வரும் 4 வயது சிறுமி  வகுப்பறையில் சிறுநீர்  கழித்ததாக  கூறப்படுகிறது.

இதனால்  ஆத்திரம்  அடைந்த  ஆசிரியை மதிய வேளையில் சிறுமியை சூடான இரும்புத் தகடு மீது அமர வைத்துள்ளார். சூடான தகடில் அமர்ந்ததில் சிறுமியின் மர்ம உறுப்பு உட்பட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால்  அதிர்ச்சியடைந்த  சிறுமியின்  பெற்றோர் பள்ளியின் தலைமை ஆசிரியை தனலட்சுமியிடம் புகார் அளித்தனர். எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்காததையடுத்து அவர்கள் பொலிசாரிடம் புகார் அளித்தனர்.

இந்த புகாரின்பேரில்  பொலிசார்  பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியை மற்றும் பணிப்பெண் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக மாநில குழந்தைகள் உரிமை அமைப்பின் உறுப்பினர் அச்யுத் ராவ் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து மாவட்ட  கலெக்டர், எஸ்.பி. ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்  அனுப்பப்பட்டுள்ளது  என்று  தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...